நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில்…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கலந்து கொண்ட அறப்போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களையும்,பருவ வயதை அடையாத குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

فوائد الحديث

போரில் பங்கேற்காத பெண்கள் மற்றும் குழந்தைகள், அதே போல் அதே சூழ்நிலையில் உள்ள முதியவர்கள் மற்றும் துறவிகள் (ஆசிரமங்களில் வசிப்பவர்கள்) போர்களில் கொல்லப் படக்கூடாது. ஆனால் அவர்கள் போர் திட்டமிடுபவர்களாகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான போரில் உதவியாளர்களாகவோ இருந்தால், அவர்கள் கொல்லப்படலாம்.

போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்கள் போரில் பங்கேற்பாளர்கள் அல்லர். அல்லாஹ்வின் பாதையில் போர் மற்றும் ஜிஹாத் செய்வதன் நோக்கம்;, இஸ்லாத்திற்கு எதிராகப் போராடுபவர்களின் பலத்தை குன்றச் செய்து, அதன் மூலம் சத்திய மார்க்கம் இஸ்லாத்தின் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வதாகும்.

போர்கள் மற்றும் மோதல்களின் போது கூட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடைப்பிடித்த கருணையின் வெளிப்பாட்டை இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றமை.

التصنيفات

போரின் ஒழுங்குகள்