நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்

நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்

யஹ்யா இப்னு உமாரா அல்மாஸினி அவர்கள் கூறுகிறார்கள். அம்ர் பின் அபீஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த வுழூ பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்: (ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள்வரை கழுவினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழு செய்யும் முறை பற்றி செயல்ரீதியாக விளக்குகிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவருமாறு வேண்டினார்கள். முதலில் தனது இரு முன்னங்கைகளை கழுவினார்கள், பின்னர் பாத்திரத்தை சாய்த்து பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை நீரை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தனது கையை பாத்திரத்தினுள் இட்டு மூன்று முறை தண்ணீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசுக்குள் நீறை செலுத்தி அதனை சிந்தினார்கள், பின் பாத்திரத்திலிருந்து நீரை அள்ளி தனது முகத்தை மூன்று தடவைகள் கழுவினார்கள். அதன் பின் நீரை அள்ளி தனது இரு கைகளையும் முழங்கைகள் வரை இரு முறை கழுவினார்கள். அதன் பின் தனது இருகைகளையும் பாத்திரத்தினுள் இட்டு இருகைகளாலும் தலையை தடவினார்கள் (மஸ்ஹ் செய்தார்கள்) அதாவது தலையின் முன்பகுதியிலிருந்து ஆரம்பித்து பிடரியின் மேல் பகுதி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடம் வரை மீண்டு கொண்டு வந்தார்கள். கரண்டைக் கால் உட்பட தனது இரு கால்களையும் கழுவினார்கள்.

فوائد الحديث

ஒரு தகவலை பதியச் செய்யவும் புரிய வைக்கவும் ஆசிரியர் மிகவும் கிட்டிய சாதனங்களை பயன்படுத்துதல். அவற்றுள் செயன்முறைக் கற்பித்தலும் ஒன்றாகும்.

வுழுவின் உறுப்புக்களை கழுவும்போது சில உறுப்புக்களை மூன்று தடவையும் இன்னும் சில உறுப்புக்களை இரு தடவைகளும் கழுவுவது அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் ஒரு தடவை கழுவுவது (கடமை) வாஜிபாகும்.

ஹதீஸில் வந்துள்ளது போல் வுழுவின் உறுப்புக்களிக்கிடையில் ஒழுங்கை பேணுவது வாஜிபாகும்.

முகத்தின் எல்லை என்பது நீளவாக்கில் நெற்றியின் முடி முளைக்கும் பகுதியிலிருந்து நாடி வரைக்குமான பகுதியாகும். அகலவாக்கில் ஒரு காதுச் சோணையிலிருந்து மறு காதுச் சோணை வரைக்குமான பகுதியாகும்.

التصنيفات

வுழூ செய்யும் முறை