கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை தர்மம் செய்யக்கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது

கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை தர்மம் செய்யக்கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது

ரஸூல்(ஸல்)அவர்கள் மிம்பரில் இருந்தவாறு தர்மம் கொடுப்பதின் சிறப்பையும் யாசித்தலை விட்டும் பேணிப்பாக இருப்பதையும் பற்றிக் கூறும் போது"கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை.தர்மம் கொடுக்கக் கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது"என்று கூறினார்கள் என இப்னு உமர்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ரஸூல் (ஸல்) அவர்கள் தர்மத்தின் சிறப்பை எடுத்துக் கூறி,மனிதர்களிடம் யாசிப்பதை இழிந்துரைத்தார்கள். மேலும் மற்றவர்களிடம் பொருள் தேடி யாசிப்பவனை விடவும் தன் செல்வத்தை தர்மம் செய்யும், அதனை நல் வழியில் செலவு செய்யும் மனிதனே சிறந்தவன் என்றும் அறிவுறுத்தினார்கள்.

التصنيفات

உபரியான தர்மம், செலவளித்தல்