மார்க்கம் என்பது நலவு நாடுதலாகும்.

மார்க்கம் என்பது நலவு நாடுதலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ருகைய்யா தமீம் பின் அவ்ஸ் அத்தாரீ (ரலி) கூறுகின்றார்கள் : "மார்க்கம் என்பது நலவை நாடுதலாகும். யாருக்கு? என நாம் வினவிய போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ், அவனது வேதம், அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர் இன்னும் முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோருக்கு நலவை நாடுதலாகும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

உளத்தூய்மையுடன் நலவை நாடுதல், அல்லாஹ்தான் ஒரே இறைவன் என்பதை விசுவாசித்து, ஏற்றுக் கொள்ளுதல், குறைகளை விட்டும் அவனைத் தூய்மைப் படுத்தி, பரிபூரண பண்புகளால் அவனை வர்ணித்தல், அல்குர்ஆன் அவனது வார்த்தை, அது இறக்கப்பட்ட ஒன்று, படைக்கப்பட்டதல்ல என்பதை ஏற்று, அவற்றில் தெளிவானவற்றை அமுல்படுத்தி, விளங்காதவற்றை பொதுவாக விசுவாசித்தல், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தையும் உண்மைப்படுத்தி, அவர்களது ஏவலை எடுத்தும், விலக்கலைத் தவிர்ந்தும் நடத்தல், முஸ்லிம் தலைமைகளுக்கு சத்தியத்தில் ஒத்துழைப்பு வழங்கி, அவர்கள் அறியாதவற்றில் வழிகாட்டி, மறந்தவற்றை, அலட்சியமாக இருப்பவற்றை அவர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் அவர்களுக்கு நலவை நாடுதல், முஸ்லிம் பொதுமக்களுக்கு சத்தியத்தின் பால் வழிகாட்டி, எங்களிடமிருந்தோ, பிறரிடமிருந்தோ தீங்கு ஏற்படாமல் முடியுமானவரை அவர்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் மேற்கண்ட "நஸீஹத்" எனும் நலவை நாடுதலில் உள்ளடங்குகின்றன. அவர்களுக்கு நலவை நாடுவதில் மேற்கண்ட அனைத்தையும் ஒருங்கிணைக்கக் கூடியது என்னவெனில் : நாம் ஒவ்வொருவரும் எமக்கு விரும்பக் கூடியவற்றையே அவர்களுக்கும் விரும்புவதாகும்.

فوائد الحديث

நலவை நாடுவது பற்றிய ஏவல் இடம்பெற்றுள்ளது.

மார்க்கத்தில் நலவை நாடுதலுக்குள்ள பாரிய இடம் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனால்தான் அதனை மார்க்கம் என்றே கூறப்பட்டுள்ளது.

மார்க்கம் என்பது சொல், செயல் இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

ஓர் அறிஞர் தான் ஆற்றும் உரையினை விளங்குவதைக் கேட்பவருக்கே சாட்டிவிடலாம், கேட்பவரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மேலதிக விளக்கங்களை அவராகவே கேட்காமல் கூற மாட்டார். அப்போது நேரடியாகக் கூறுவதை விட மேற்கண்ட முறை உள்ளத்தில் மிக ஆழமாக பதிய அதிக வாய்ப்புள்ளது.

நபி (ஸல்) அவர்களின் அழகான கற்பித்தல் முறையை இங்கு அவதானிக்கலாம். ஒன்றைப் பொதுவாகக் கூறி விட்டு, பின்னர் அதனை விரிவாகக் கூறுகின்றார்கள்.

நபித்தோழர்களிடம் கல்வியின் மீதிருந்த ஆர்வத்தை இங்கு காணலாம், அவர்கள் தாம் தெளிவுபெற வேண்டிய எதனையும் கேட்காமல் விட மாட்டார்கள்.

மிக முக்கியமானதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நபியவர்கள் முதலில் அல்லாஹ்வுக்கு நலவை நாடுவதைக் கூறிவிட்டு, அதன்பின் முறையே அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்கள், முஸ்லிம் தலைமைகள், முஸ்லிம் பொதுமக்கள் என வரிசையாகக் கூறியுள்ளார்கள்.

அதிக கவனம் செலுத்தவும், தெளிவு படுத்தவும் ஒரு வார்த்தையை மூன்று தடவை உறுதிப்படுத்திக் கூற முடியும். முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் "மார்க்கம் என்பது நலவு நாடுதலாகும்" என மூன்று முறை கூறப்பட்டுள்ளது.

நலவு நாடுதல் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்குகின்றது.

التصنيفات

தலைவருக்கு பிரஜைகள் ஆற்றவேண்டிய கடமைகள்