எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும்…

எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

தனது நேசத்திற்குரிய தோழராகிய, நபி (ஸல்) அவர்கள் தனக்கு மூன்று விடயங்களை உபதேசமாகக் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : முதலாவது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். இரண்டாவது, ஒவ்வொரு நாளும் இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். மூன்றாவது, உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல். இது, இரவின் இறுதிப் பகுதியில் கண்விழிக்க முடியாது எனப் பயப்படுபவர்களுக்காகும்.

فوائد الحديث

நபியவயவர்கள் தமது தோழர்களுக்கு செய்யும் உபதேசங்கள் ஆளுக்காள் வேறுபட்டிருப்பது, தமது தோழர்களின் நிலைமைகள் பற்றியும், ஒவ்வொருவருக்கும் எது பொருத்தமானது என்பது பற்றியும் தாம் அறிந்திருப்பதன் அடிப்படையிலாகும். உறுதிமிக்கவருக்கு ஜிஹாத் பொறுத்தமாக இருக்கும். வணக்கவாளிக்கு வணக்கம் பொருத்தமாக இருக்கும். அறிஞருக்கு அறிவு பொருத்தமாக இருக்கும்.

'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல்' என்ற நபியவர்களின் வார்த்தையை விளக்கும் போது இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : 'இங்கு நாடப்படுவது, ஒவ்வொரு ஹிஜ்ரி மாதத்திலும், 'பீழ்' என அழைக்கப்படும், 13ஆம், 14ஆம், 15ஆம் தினங்களே'

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸில், உறங்க முன்னர் வித்ர் தொழுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, கண்விழிக்கமுடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் விடயத்திலாகும்.

இந்த மூன்று அமல்களினதும் முக்கியத்துவம். ஏனெனில், நபியவர்கள் தமது பல தோழர்களுக்கு இதை உபதேசமாகக் கூறியுள்ளார்கள்.

'இரண்டு ரக்அத் ழுஹாத் தொழுதல்' என்ற வார்த்தை தொடர்பாக, இப்னு தகீக் அல்ஈத் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : 'வலியுறுத்திக் கூறமுடியுமான குறைந்த அளவை நபியவர்கள் இங்கு கூறியிருக்கலாம். இது ழுஹாத் தொழுகை சிறப்புக்குரியது என்பதையும், அது குறைந்தபட்சம் இரு ரக்அத்கள் என்பதையும் அறிவிக்கின்றது.

ழுஹாத் தொழுகையின் நேரம் : சூரியன் உதித்துக் கிட்டத்தட்ட, கால் மணிநேரத்தில் இருந்து ஆரம்பித்து, ழுஹருடைய நேரத்திற்குக் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் முன்னர் வரை இருக்கும். அதன் எண்ணிக்கை : குறைந்த பட்சம் இரு ரக்அத்கள் ஆகும். அதன் அதிகபட்ச எண்ணிக்கையில் கருத்துவேற்றுமை உள்ளது. எட்டு ரக்அத்கள் என்றும், அதன் அதிகபட்ச எண்ணிக்கை அளவற்றது என்றும் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

வித்ருடைய நேரம் : இஷா தொழுதது தொடக்கம் பஜ்ர் உதயமாகும் வரையிலாகும். வித்ர் குறைந்தது ஒரு ரக்அத் ஆகும். அதிகபட்சம் பதினொரு ரக்அத்கள் ஆகும்.

التصنيفات

உபரியான நோன்பு