إعدادات العرض
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी සිංහල Kurdî Português Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Hausa Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Македонски ไทย తెలుగు Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy ភាសាខ្មែរ پښتو Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
மிகுந்த பதட்டம் மற்றும் துக்கத்தின் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: 'லா இலாஹ இல்லல்லாஹ்': அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. 'அல்-அளீம்': என்பது தனது தாத் (மெய்நிலை) மற்றும் பண்புகளிலும் செயல்களிலும் (உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் பெற்றவனாவான். 'அல்-ஹலீம்' : என்பது பாவியை உடனடியாகத் தண்டிக்காமல், மாறாக அதைத் தாமதப்படுத்தி, தனக்கு அவனை தண்டிப்பதற்கான சக்தி இருந்து, எல்லாவற்றின் மீதும் வல்லமைப் படைத்தாவனாக இருக்கும் அவன் அவனை மன்னிப்பவன் என்பது பொருளாகும் . 'லா இலாஹ இல்லல்லாஹ் ரப்புல்-அர்ஷில்-அலீம்' : அதாவது அவனே மகத்தான சிம்மாசனத்தை படைத்தவன்; 'லா இலாஹ இல்லல்லாஹ் ரபபுஸ் ஸமாவாதி வல் அர்ழி' : வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே, மேலும் அவற்றுக்கிடையே உள்ளவற்றைப் படைத்தவன், அதன் உரிமையாளன் சீர்படுத்துபத்துபவன் மற்றும் தான் விரும்புவதைக் செய்பவன் என்பது இதன் கருத்தாகும் 'ரப்புல் அர்ஷில் கரீம்' என்பது: சிறப்பான சிம்மாசனத்தைப் படைத்தவன் என்பதைக் குறிக்கும்.فوائد الحديث
கஷ்டம் மற்றும் சிரமம் ஏற்படும் காலங்களில், பிரார்த்தனை மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவது கடமையாகும்.
கஷ்ட காலங்களில் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது விரும்பத்தக்கதாகும்.
(அளவற்ற அருளாளன்)அல்லாஹ்; தமது மாட்சியும் மகிமையும் உடைய நிலையில் உயர்ந்துள்ள அர்ஷ் (அரியாசனம்) அனைத்து படைப்புகளிலும் மிக உயர்ந்ததும்; மிகப் பெரியதும் மிகவும் மகத்தானதுமாகும். நபி முஹம்மது ﷺ அவர்கள் அதனை 'மிக மகத்தானது' என்றும் 'மிக கண்ணியமிக்கது' என்றும் வர்ணித்துள்ளார்கள்.
இங்கே நபியவர்கள் வானங்களையும் பூமியையும் விசேடமாக குறிப்பிட்டதற்கான காரணம் அவை நாம் காணக்கூடிய படைப்புகளிலும் மிகப் பெரியவை என்பதினாலாகும்.
இமாம் அத்தீபீ இந்த திக்ர் பற்றி குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறார்: துன்பத்தை நீக்குவதற்கு ஏற்றவாறு 'இரட்சகன்;' (ரப்) என்று குறிப்பிடுவதன் மூலம் நபியவர்கள் இந்தப் புகழை ஆரம்பித்துள்ளார்கள்;, ஏனெனில் அது தெய்வீக அக்கறையைப் பிரதிபலிக்கிறது. இதில் 'தஹ்லீல்' (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கூறுவது) அடங்கும், இது ஏகத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் மகத்துவத்தின் அனைத்து மேன்மைகளுக்கும் அடித்தளமாக உள்ளது. 'மகத்துவம்',(அல்அழமா) இது அல்லாஹ்வின் முழுமையான சக்தியைக் குறிக்கிறது. மற்றும் 'சகிப்புத்தன்மை',(அல்ஹில்ம்) இது அறிவைக் குறிக்கிறது, ஏனெனில் அறியாதவர் சகிப்புத்தன்மை அல்லது தாராள மனப்பான்மை கொண்டவராக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது, இவையே உன்னத பண்புகளின் அடிப்படையாகும்;.
