பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு)…

பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார்

அல்லாஹ்வின் தூதர் கூறியதாகஅபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை 'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஜும்ஆத் தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் சிறப்புக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நேரகாலத்துடன் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்லுதல் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பித்து இமாம் உரை நிகழ்த்த வரும் வரை நீடிக்கிறது. இது ஐந்து நேரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நேரங்கள் சூரியன் உதித்ததிலிருந்து இமாம் பள்ளிக்கு வருகைத் தந்து மின்பரில் ஏறும் வரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு: முதலாவது : ஒருவர் பெருந்தொடக்கை நீக்க குளிப்பது போன்று முழுமையான முறையில் குளித்து விட்டு ஜும்ஆத் தொழும் பள்ளிக்கு அதன் ஆரம்ப நேரத்தில் சென்றால் அவர் ஒரு ஒட்டகையை தர்மம் செய்தவர் போன்றாவராவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் பள்ளிக்குள் உரை நிகழ்த்த வந்துவிட்டால் பள்ளிக்குள் முதன் முதலாக வருபவர்களை பதிவு செய்ய அமர்ந்திருந்த மலக்குகள் பதிவு செய்வதை நிறுத்தி விட்டு, இமாமின் உரையை செவிமடுக்க வந்து விடுவார்கள்.

فوائد الحديث

ஜும்ஆத் தினத்தில் தொழுகைக்கு செல்ல முன் குளிக்க வேண்டும் என ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

ஜும்ஆத் தொழுகைக்கு ஆரம்ப நேரத்தில் நேரகாலத்துடன் செல்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.

நற்காரியங்களில் விரைந்து செயற்பட உட்சாகமூட்டப்பட்டிருத்தல்.

ஜும்ஆத் தொழுகைக்கு மலக்குகள் வருகை தந்து பிரசங்கத்தை செவிமடுக்கின்றமை.

மலக்குகள் மஸ்ஜித்தின் வாயில்களில் அமர்ந்து ஜும்ஆத் தொழுகைக்காக பள்ளிக்கு வருகைத் தருவோரின் பெயர்களை அவர்கள் சமூகமளித்த நேரத்தின் அடிப்படையில் பதிவு செய்கின்றமை.

இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 'வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு பின் பள்ளிக்குச் செல்பவர்' என்ற ஹதீஸின் கூற்றானது, வெள்ளிக் கிழமையில் குளிப்பதற்கான நேரம் பஜ்ர் உதயத்துடன் தொடங்கி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் புறப்படும் நேரம் வரை நீடிக்கிறது என்பதைக் குறிக்கிறது. இது ஒரு முஸ்தஹப்பான குளிப்பாகும்.

التصنيفات

குளிப்பின் சுன்னாக்களும் ஒழுங்குகளும், ஜும்ஆ தொழுகை