إعدادات العرض
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் …
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்- எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து மிகவும் விலகி நிற்பார்கள்
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்- எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து மிகவும் விலகி நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச்சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தவிர. (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Hausa Kurdî Português සිංහල Русский Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy Українська ភាសាខ្មែរ ಕನ್ನಡ Svenska پښتو Wolof नेपाली Soomaali Shqip Српски မြန်မာالشرح
ஆஇஷா பின்த் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உயர்ந்த நற்குணங்களில்; சிலதை குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட நற்குணங்களில் ஒன்று : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அதில் பாவமல்லாதவற்றில் எளியதையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த எளிய காரியம் பாவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அதிலிருந்து மிகத் தூரமாக இருப்பார்கள்; அப்போது கடினமானதையே தேர்ந்தெடுப்பார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகாரங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள். இரண்டாவது நற்குணம் : நபியவர்கள் தமது தனிப்பட்ட விவகராங்களுக்காக ஒருபோதும் பழிவாங்கவில்லை. தமக்கான சொந்த விவகராங்களில் பிறர் செய்த குறைகளை அவர் மன்னிப்பவராகவும் பொறுப்பவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அப்போது அல்லாஹ்வுக்காக மாத்திரம் கடுமையாக நடந்து கொள்வார்கள். அத்துடன் அல்லாஹ்வுக்காகக் கோபப்படும் விடயத்தில் அவர் மக்களிலேயே மிகத் தீவிரமுடையவராக இருந்தார்கள்.فوائد الحديث
பாவமல்லாத காரியங்களில் மிகவும் எளிதான விடயங்களை தேர்வு செய்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.(முஸ்தஹப்பாகும்)
இஸ்லாத்தின் எளிமை தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.
அல்லாஹ்வுக்காகக் கோபப்படுவது ஷரீஅத் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும். (சட்டபூர்வமானதாகும்).
நபி (ஸல்) அவர்களின் பொறுமை சகிப்புத்தன்மை, மற்றும் அல்லாஹ்வின் வரம்புகளை உண்மையாக நிலைநிறுத்துவதில் அவர் காட்டிய உறுதிப்பாடு.
இந்த ஹதீஸ் கடினமானதைக் கைவிடுதல், எளிதானதைக் கொண்டு திருப்தி அடைதல் மற்றும் அத்தியாவசியமற்றவற்றைப் பின்தொடர்வதைக் கைவிடுதல் ஆகியவற்றின் ஒழுக்கத்தைக் கற்பிக்கிறது' என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமைகளைத் தவிர மற்ற அனைத்து தனிப்பட்ட விஷயங்களிலும் மன்னிப்பதை வலியுறுத்தியிருத்தல்.
