நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண…

நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண சூழ்நிலைகளில் அவனது சலுகைகளைப் பயன்படுத்ததுவதை விரும்புகிறான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண சூழ்நிலைகளில் அவனது சலுகைகளைப் பயன்படுத்ததுவதை விரும்புகிறான்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார்]

الشرح

சட்டதிட்டங்கள்,வணக்கவழிபாடுகள்; மற்றும் நியாயமான காரணம் நிமித்தம் அதாவது பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கியும் சேர்த்தும் தொழுதல், போன்ற அல்லாஹ்வால் அனுமதியளிக்கப்ட்ட சலுகைகளைப் பயன்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். கடமையான விடயங்களை செய்வதை அவன் விரும்புவது போன்று சலுகைகளாகத் தரப்பட்டவைகளையும் நிறைவேற்றுவதை விரும்புகிறான் ஏனெனில் கட்டாயமாக செய்யவேண்டும், என்ற அல்லாஹ்வின் கட்டளையும் அவனால் அளிக்கப்பட்ட சலுகைகளும் ஒன்றாகும்.

فوائد الحديث

அல்லாஹ் வழங்கியுள்ள சலுகைகளை பயன்படுத்துவதை அவன் விரும்புகிறான் என்பது அல்லாஹ் அடியார்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய கருணையை காட்டுகிறது.

இஸ்லாமிய ஷரீஆவின் பூரணத்துவமும் அது முஸ்லிம்களுக்கு ஏற்படும் சிரமத்தை நீக்குவதற்கான –தவிர்ப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும்.

التصنيفات

மார்க்கத் தீர்ப்பு, ஷரீஆவின் இலக்குகள்