ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும்.…

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகள்.

[صحيح] [رواه مسلم]

الشرح

ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் செயல்களும் நின்றுவிடும். என்றாலும் அவரின் மரணத்தின் பின் மூன்று செயல்கள் மூலம் மாத்திரமே அவருக்கு நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் அச்செயல்களுக்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார். அவைகள் வருமாறு : முதலாவது : அல்லாஹ்வின் பாதையில் எதையாவது அர்ப்பணித்தல், (வக்ப் செய்தல்) பள்ளிவாசல்கள் கட்டுதல், கிணறுகள் தோண்டுதல் போன்ற தொடர்ச்சியான வெகுமதியையும் நிரந்தரமான நன்மையையும் பெற்றுத் தரும் தர்மம். இரண்டாவது: மக்களுக்கு பயனளிக்கும் அறிவு. இதில் புத்தகங்களை எழுதுதல் மற்றும் கற்பித்தல் போன்றன அடங்கும். ஒருவர் மற்றொருவருக்கு அறிவைப் புகட்டி, அந்த நபர் தனக்கு கற்பித்தவரின் மரணத்திற்குப் பிறகு அதை மற்றவர்களுக்கு கற்பித்தால் பரப்பினால் அக்கூலி மரணித்தவருக்கு வந்து சேரும். மூன்றாவது: தனது பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்யும் இறைவிசுவாசமும் நல்லொழுக்கமும் நிறைந்த குழந்தை.

فوائد الحديث

மரணத்திற்குப் பிறகு ஒருவர் பெறும் நன்மைகளில் தொடர்ச்சியான தர்மம் (ஸதகா ஜாரியா), பிரயோஜனமலிக்கும் அறிவு மற்றும் (மற்றவர்களால் அவருக்காகச் செய்யப்படும்) பிரார்த்தனைகள்; இந்த விஷயத்தில் அறிஞர்கள் ஏகோபித்த கருததைக் கொணடுள்ளனர். சில ஹதீஸ்களில், ஹஜ்ஜும் இவற்றுடன் சேர்க்கப் பட்டுள்ளது.

நன்மைக்கும் நற்செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பதன் காரணமாகவே ஹதீஸில் இந்த மூன்று விடயங்கள் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன நல்லவர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என விரும்பும் மூன்று விஷயங்கள் இவைதான்.

எந்தவொரு பயனுள்ள அறிவையும் மற்றொரு நபருக்குக் நகர்த்தி, அது மரணத்திற்குப் பிறகு பயன்படுத்தப்பட்டால், அவர் அதன் பலனைப் பெறுவார். ஆனால் இங்கே முன்னணியில் இருப்பது மத அறிவும் அது தொடர்பான பிற அறிவும்தான்.

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில்; மிகவும் நன்மை பயக்கும் விடயம் அறிவு, ஏனென்றால் அறிவு அதைப் பெறுபவருக்கு பயனளிப்பது போல, அது இஸ்லாமிய மார்க்கத்தையும் பாதுகாக்கிறது. எல்லா படைப்புகளும் இதனால் பயனடைகின்றன. நீங்கள் உயிருடன் இருக்கும்போது மக்கள் உங்கள் அறிவால் பயனடைவது போல, உங்கள் மரணத்திற்குப் பிறகு நீங்கள் விட்டுச் சென்ற அறிவால் மக்கள் பயனடைகிறார்கள்.

குழந்தைகளை நல்லொழுக்கமுள்ள உள்ளவர்களாக வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் வலியுறுத்தியிருத்தல் ஏனெனில்; அத்தகைய குழந்தைகள் மட்டுமே மறுமையில் தமது பெற்றோருக்கு பயனளிப்பார்கள். அவர்களின் பயன்களின் ஒன்று பெற்றோருக்காக அவர்கள் பிரார்த்திப்பதாகும்.

பெற்றோருக்கு அவர்களின் மரணத்திற்குப் பிறகு நன்மை செய்ய பிள்ளைகளை வலிறுத்தியுள்ளமை. இதன் மூலம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

இறந்தவரின் குழந்தைகள் அல்லாதோர் இறந்தவருக்காகச் செய்யும் பிரார்த்தனைகளும் பிரயோஜனமலிக்கும். ஆனால் ஹதீஸ் குழந்தைகளைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிடுவதற்கான காரணம்; அவர்கள் தங்கள் பெற்றோருக்காக இறக்கும் வரை பிரார்த்தனை செய்பவர்கள்.

التصنيفات

வக்ப் செய்தல், பிரார்த்தனையின் சிறப்புகள், Doing Good Deeds on behalf of the Deceased and Gifting them the Reward, Merit and Significance of Knowledge