'தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளிக்கு வெள்ளியையோ, கோதுமையை கோதுமைக்கோ, வாற்கோதுமையை வாற்கோதுமைக்கோ, ஈத்தம்…

'தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளிக்கு வெள்ளியையோ, கோதுமையை கோதுமைக்கோ, வாற்கோதுமையை வாற்கோதுமைக்கோ, ஈத்தம் பழத்தை ஈத்தம் பழத்திற்கோ உப்பை உப்பிற்கோ, ஒரே மாதிரியாக, சரிநிகராக, உடனுக்குடன் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் விற்பனை செய்யுங்கள்! இவ்வினங்கள் வித்தியாசப்பட்டால் நேரடியாக, உடனுக்குடன் விரும்பியவாறு விற்பனை செய்யுங்கள்'

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'தங்கத்திற்குத் தங்கத்தையோ,வெள்ளிக்கு வெள்ளியையோ, கோதுமையை கோதுமைக்கோ, வாற்கோதுமையை வாற்கோதுமைக்கோ, ஈத்தம் பழத்தை ஈத்தம் பழத்திற்கோ உப்பை உப்பிற்கோ, ஒரே மாதிரியாக, சரிநிகராக, உடனுக்குடன் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் விற்பனை செய்யுங்கள்! இவ்வினங்கள் வித்தியாசப்பட்டால் நேரடியாக, உடனுக்குடன் விரும்பியவாறு விற்பனை செய்யுங்கள்'.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

வட்டி ஏற்பட வாய்ப்புள்ள பொருட்களான, தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தம்பழம், உப்பு ஆகியவற்றில் எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் இங்கு தெளிவு படுத்துகின்றார்கள். தங்கத்திற்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி போன்று, ஒரே இனத்தில் விற்பனை செய்வதாக இருந்தால் பின்வரும் இரு நிபந்தனைகள் அவசியமாகும் : முதலாவது : தங்கம் மற்றும் வெள்ளி போன்று நிறுக்கப்படுபவையாக இருந்தால், நிறையில் சமனாக இருத்தல், கோதுமை, வாற்கோதுமை, ஈத்தாம்பழம் மற்றும் உப்பு போன்று, அளக்கப் படுபவையாக இருந்தால், அளவையில் சமமாக இருக்க வேண்டும். இரண்டாவது : வியாபாரம் நடக்கும் அதே இடத்தில், விற்பவர் பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை வெள்ளிக்கோ, ஈச்சம்பழத்தை கோதுமைக்கோ விற்பது போன்று இந்த இனங்கள் வேறுபட்டால், (இந்நிலையில்) ஒரு நிபந்தனையுடன் வியாபாரம் செய்யலாம். அதாவது, வியாபாரி பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் வியாபாரம் நடைபெறும் இடத்தில் கையகப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால், அவர்கள் தடுக்கப்பட்ட வட்டியில் வீழ்ந்து விடுவார்கள். அதில் விற்பவரும், வாங்குபவரும் சமமாகும்.

فوائد الحديث

வட்டி ஏற்பட வாய்ப்புள்ள பொருட்கள் மற்றும் அவற்றை விற்கும் விதம் பற்றிய தெளிவு.

வட்டி வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளமை.

வட்டி எனும் காரணியில், பணநோட்டுக்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் சட்டமே வழங்கப்படும்.

வட்டி ஏற்பட வாய்ப்புள்ள பொருட்களை வாங்குவதிலும், விற்பதிலும் சில நிலைகள் உள்ளன. 1. அவ்வாறான ஒரு பொருளை அதே இனத்தில் உள்ள ஒரு பொருளுக்கு விற்றல். உதாரணமாக, தங்கத்தை தங்கத்துக்கும், ஈச்சப் பழத்தை ஈச்சப் பழத்துக்கும் விற்றல். இது செல்லுபடியாவதற்கு இரு நிபந்தனைகள் உள்ளன: அளவையில் அல்லது நிறையில் சமமாக இருத்தல், குறிப்பிட்ட சபையிலேயே பொருளையும் பெறுமதியையும் கையகப்படுத்தல். 2. அவ்வாறான வட்டி ஏற்பட வாய்ப்புள்ள ஒரு பொருளை, வட்டி ஏற்பட வாய்ப்புள்ள வேறு இனத்தைச் சேர்ந்த, காரணியில் ஒன்றுபடும் ஒரு பொருளுடன் விற்றல்; உதாரணமாக, தங்கத்தை வெள்ளிக்கும், கோதுமையை வாற்கோதுமைக்கும் விற்றல். இங்கு குறிப்பிட்ட சபையிலேயே பொருளையும் பெறுமதியையும் கையகப்படுத்தல் அவசியம். சமமாக இருப்பது அவசியமல்ல. 3. அவ்வாறான வட்டி ஏற்பட வாய்ப்புள்ள ஒரு பொருளை, வட்டி ஏற்பட வாய்ப்புள்ள வேறு இனத்தைச் சேர்ந்த, காரணியில் வேறுபடும் ஒரு பொருளுடன் விற்றல்; இங்கு குறிப்பிட்ட சபையிலேயே பொருளையும் பெறுமதியையும் கையகப்படுத்தவேண்டும் என்றோ, சமமாக இருப்பது அவசியம் என்றோ நிபந்தனையிடப்படமாட்டாது. உதாரணமாக, தங்கத்துக்கு ஈச்சம்பழத்தை விற்றல்.

வட்டி ஏற்பட வாய்ப்பில்லாத பொருட்களையோ, அல்லது அவ்வாறான ஒரு பொருளை வட்டி ஏற்பட வாய்ப்புள்ள ஒரு பொருளுடனோ வாங்கி, விற்கும் போது உடன் கையகப்படுத்துவதோ, சமமாக இருப்பதோ அவசியமில்லை. உதாரணமாக, தங்கத்துக்கு காணிகளை விற்பது.

التصنيفات

வட்டி