நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் -நினைவுகூர்வதில் பேரார்வமுடையவராக திகழ்ந்தார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் நபியவர்கள் எல்லாக் காலங்களிலும், இடங்களிலும், நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொடர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தமையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

எல்லா நேரங்களிலும் நபியவர்களை முன்மாதிரியாகக்கொண்டு அல்லாஹ்வை திக்ர் செய்ய ஆர்வமூட்டப்பட்டடிருத்தல் என்றாலும் இயற்கைத்தேவையை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்களின் போது திக்ர் செய்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

التصنيفات

குர்ஆனுக்குரிய சட்டங்கள்