நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல்…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக கழிவறைக்குள் நுழையும்போது அல்லாஹ்விடம் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாது காக்குமாறு கோருவார்கள். ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அல்குப்ஸ்,அல்கபாஇஸ் என்பது தீங்கு மற்றும் அசுத்தம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது.

فوائد الحديث

இயற்கைத்தேவையை நிறைவேற்ற கழப்பிடத்தினுள் நுழைபவர் இந்த துஆவை ஓதுவது (முஸ்தஹப்பாகும்) நபி வழியாகும்.

அடியார்கள் -மனிதர்கள்- யாவரும் எல்லா நிலைகளிலும் தங்களுக்கு தீங்கை ஏற்படுத்தும், அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவதற்கு தேவையுடையவர்களாக இருத்தல்.

التصنيفات

இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள்