ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன்…

ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த பாவங்கள் யாவும் வெளியேறி விடும்.

ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த தவறுகள் யாவும் வெளியேறி விடும்.மேலும் அவன் தன் இரு கைகளையும் கழுவியதும் அவனின் இரண்டு கரங்களும் தொட்ட பாவங்கள் யாவும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அதனை விட்டும் வெளியேறி விடும். மேலும் அவன் தனது இரண்டு கால்களையும் கழுவியதும் அவனின் இரண்டு கால்களும் நடந்து சென்று செய்த பாவங்கள் யாவும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் வெளியேறி விடும்.ஈற்றில் அவன் சகல பாவங்களை விட்டும் தூய்மையாக வெளியேறி விடுவான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம்:முகம்,இரண்டு கைகள்,தலை, இரண்டு கால்கள் ஆகிய நான்கு உருப்புக்களையும் ஷரீஆ கூறும். வுழூஃ தூய்மைப்படுத்தி வைக்கும். மேலும் இந்தத் தூய்மைப்படுத்தும் காரியம் புலன் மூலம் உணரும் அடிப்படையிலும், மற்றும் ஆன்மீக அடிப்படையிலும் நிகழும்.வுழூ செய்யும் போது முகம்,கை,கால்களைக் கழுவிக் கொள்வதன் மூலமும், தண்ணீரைத் தொட்டுத் தலையை மஸ்ஹு செய்துக் கொள்வதன் மூலமும் இந்த உருப்புக்கள் சுத்தமாக்கப்படுவது புலன் மூலம் உணரத் தக்கவை என்பது வெளிப்படை. எனினும் ஏனைய உருப்புக்களை கழுவும்படியாகப் பணித்திருக்கும் அல்லாஹ் தலை விடயத்தில் அதனை மஸ்ஹு செய்து கொள்ளும்படி இலகுபடுத்தித் தந்துள்ளான். ஏனெனில் தலை உடலுக்கு மேலே இருக்கின்றபடியால் அதில் தலை முடியும் இருக்குமானால் அதனைக் கழுவும் போது குறிப்பாக மாரி காலத்தில் மக்களுக்கு அதனால் கடும் சிரமம் ஏற்படும். எனவே தலை விடயத்தில் அதனைக் கழுவி விடுவதற்குப் பதிலாக அதனை மஸ்ஹு செய்வதனை மாத்திரம் அல்லாஹ் கட்டாயப் படுத்தியுள்ளான். இது அல்லாஹ்வின் பேரருளாகும். பெரும்பாலும் வெளியில் தெரியும் இந்த உருப்புக்களை வுழூவின் போது கழுவிக் கொள்வதை இஸ்லாம் மார்க்கம் கட்டயப்படுத்தி யிருப்பது, இஸ்லாத்தின் பூரணத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். மேலும் வுழூவின் மூலம் அநுகூலமாகும் ஆன்மீக சுத்தமே ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவையானதாகும். அதுதான் பாவங்களை விட்டும் தூய்மையாகுதல். இது அந்த உருப்புக்களைக் கழுவும் போது அதிலிருந்து வெளியேறும் பாவங்களின் மூலம் உறுதியாகிறது.முகத்தைக் கழுவும் போது அவன் தன் கண்கள் மூலம் பார்த்த தவறுகள் யாவும் வெளியேறிவிடும் என்று இங்கு குறிப்பட்டிருப்பது ஒரு எடுத்துக் காட்டலின் அடிப்படையிலாகும். ஏனெனில் சில வேளை மூக்கு தான் நுகரக் கூடாததை நுகருவதன் மூலமும்,வாய் ஹராமான பேச்சுக்கப் பேசுவதன் மூலமும் தவறுகள் ஏற்படலாம்.எனினும் பார்வை மூலமே பெரும்பாலும் தவறுகள் நிகழ்கின்றன. எனவேதான் இங்கு கண் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் இதன் நோக்கத்தை நன்கு அறிந்தவன்அல்லாஹ் ஒருவனே. மேலும் வுழூஃ பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகும், என்று ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் சிறு பாவங்களே கருதப்படுகின்றனவேயன்றி,பெரும் பாவங்களல்ல. ஏனெனில் பெரும் பாவங்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பது கட்டாயமாகும்

التصنيفات

வுழூ, உடல் செயற்பாடுகளின் சிறப்புகள்