'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப்…

'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபியவர்களின் காலத்திற்கு பிறகு, தனது சமூகத்தில் சிலரின் நிலை குறித்து நபிகளார் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதாவது தனது சமூகத்தாரில் சிலர் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை தமது நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் வழக்காறுகளிலும் பாரம்பரிய விடயங்களிலும் மிகவும் துல்லியமாக சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் பின்பற்றி நடப்பார்கள். இந்நிலையை அவர்கள் விளக்கும் போது அந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் உடும்பின் பொந்தினுள் நுழைந்தாலும் இவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து அவ்வேளையைச் செய்வார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

இது நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது குறித்த நிகழ்வு நடக்க முன்னரே அது பற்றிய தீர்க்கதரிசனத்தை நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளமை. அது அவர்கள் அறிவித்தது போன்றே நடந்துவிட்டது.

முஸ்லீம்கள் காஃபிர்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், பண்டிகைகள் அல்லது உடைகள் போன்றவற்றில் பின்பற்றி நடப்பது

தடைசெய்யப்பட்டுள்ளது.

கருத்து ரீதியிலான விடயங்களை நடைமுறைரீதியான எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்துவது இஸ்லாத்தின் கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும்.

அல்ழப்: துர்வாடையுடன் காணப்படும் ஒரு விலங்கு. இதன் வாழிடம் கடும் இருள் நிறைந்தது. இது பாலைவனங்களில் அதிகம் காணப்படும் பிராணிகளில் ஒன்று. இதனை எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டதன் நோக்கம் இதன் வாழிடமான பொந்து மிகவும் குறுகலாகவும் மோசமாகவும் இருப்பதினாலாகும். இவ்வாறிருந்தும், அந்த யூதர்களின் வழிமுறைகைளையும் ஆசாரங்களையும் பின்பற்றுவோர் அந்த யூதர்கள் இவ்வாறான மோசமான குறுகலான வழியில் சென்றாலும் அதனையும் அவர்கள் அங்கீகரித்து அவர்களுடன் நுழைந்து செல்வார்கள் . அல்லாஹ் இவ்வாறான நிலையிலிருந்து பாதுகாப்பானாக.

التصنيفات

தடைசெய்யப்பட்ட உடன்படுதல்