'(வெள்ளிக்கிழமை) யார் வுழு செய்து அதனை அழகிய முறையில் செய்து, பின் ஜும்ஆவிற்கு வருகை தந்து (இமாமின் உரையை)…

'(வெள்ளிக்கிழமை) யார் வுழு செய்து அதனை அழகிய முறையில் செய்து, பின் ஜும்ஆவிற்கு வருகை தந்து (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் செய்த (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மேலதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : '(வெள்ளிக்கிழமை) யார் வுழு செய்து அதனை அழகிய முறையில் செய்து, பின் ஜும்ஆவிற்கு வருகை தந்து (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் செய்த (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மேலதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. இமாம் உரைநிகழ்த்தும் போது தரையில் கிடக்கும் சிறுகற்களை தொட்டு யார் விளையாடுகிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அவர்கள் யார் வுழு செய்து அதன் அர்கான்கள் மற்றும் சுன்னாக்கள் ஒழுக்கங்களை பேணி சீராகவும் அழகிய முறையிலும் செய்து, பின் ஜுமுஆத் தொழுகைக்காக வந்து இமாமின் உரையை ஈடுபாட்டுடன் மௌனமாக செவிதாழ்த்திக் கேட்பதோடு வீணான பேச்சுக்களை பேசாது மௌனமாக இருப்பவரின் பத்து நாட்களுக்கான சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நன்மையென்பது அது போன்று பத்து மடங்காகும். என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . குத்பாவில் கூறப்படும் அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பொடிக்கற்களால் விளையாடுதல் போன்ற சிந்தனை திசைத் திருப்பும்; வீணான செயல்களில் ஈடுபடுவதானது ஜுமுஆவின் பூரணகூலியைப் பெற்றுக் கொள்வதில் தடையாக இருப்பதோடு, அதற்கான அதிஷ்டமும் கைநழுவிவிடும்.

فوائد الحديث

வுழுவை பரிபூரணமாகவும் அழகிய முறையிலும் செய்வதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளதோடு ஜுமுஆத் தொழுகையை பேணிவருவதற்கும் வலியுறுத்தப்பட்டிருத்தல்.

ஜுமுஆத் தொழுகையின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.

ஜுமுஆ குத்பாவின்போது –உரையின் போது- மௌனமாக இருப்பதும், கதைத்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு குத்பாவை அலட்சியம் செய்யாது இருப்பதும் அவசியமாகும்

குத்பாவின் போது ஒருவர் வீணான செயலில் ஈடுபட்டால் அவரின் தொழுகை செல்லுபடியாவதோடு, கடமையான தொழுகையும் நிறைவேற்றப்பட்டதாக அமையும். அதே வேளை அதற்கான கூலி குறைக்கப்படும்.

التصنيفات

ஜும்ஆ தொழுகையின் சிறப்பு