அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை)…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்தி கற்றுக் கொடுப்பார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், மேலும் ரமளான் மாதத்தில் அவரது தாராள மனப்பான்மை இன்னும் அதிகமாக இருந்தது. அவர் வேண்டியவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 1- ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தமை. 2- குர்ஆனை மீட்டுவது, அதாவது அல் குர்ஆனை மனப்பாடத்தில் ஓதுவதை மறுபரீசீலனை செய்வது. அல்குர்ஆனில் அந்நேரம் வரை இறக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதியோடு அதனை நபியவர்களுடன் மறுபரிசீலனை செய்தார்கள். இந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மழையுடனும் கருணையுடனும் அனுப்பும் இனிமையான காற்றை விட, மக்களுக்கு மிகவும் தாராளமாகவும், கனிவாகவும், வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

فوائد الحديث

குறிப்பாக ரமழான் மாதம் வழிபாடுகளினதும் நல்ல செயல்களின் பருவகாலமாகவும் இருப்பதால் ரமழான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தயாள குணமும் தாராள மனப்பான்மை பற்றியும் தெளிவுபடுத்தப் பட்டிருத்தல்.

எல்லா நேரங்களிலும் தாராள மனப்பான்மையுடன் இருப்பதற்கு ஊக்கமளித்தல். குறிப்பாக ரமழான் மாதத்தில் அதிக தாராளத்தன்மையுடன் வாரி வழங்குவது விரும்பத்தக்க (முஸ்தஹப்பான) காரியமாகும்.

ரமழான் மாதத்தில் முடிந்தவரை அல்குர்ஆன் ஓதுதல் மக்களுக்குக்கு செலவுசெய்தல் தானதர்மங்களை வழங்குதல் ஆகிய விடயங்களை அதிகம் செய்தல்.

பெற்ற அறிவைத் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்று, மாணவர்கள் மற்றும் அறிஞர்களுடன் அதை ஆராய்வதும் மறுபரிசீலனை செய்வதுமாகும்.

التصنيفات

ரமழான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கொடை