'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'

'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு மனிதர் தனது மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற தன்மீது செலவு கடமையான குடும்பத்தார்க்கு அல்லாஹ்வை நெருங்கி, அவனிடம் நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தால் அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

குடும்பத்திற்கு செலவு செய்வதினால் கூலியும் நன்மையும் கிடைத்தல்.

ஒரு முஃமின் தனது செயற்பாடுகளில் (அல்லாஹ்வின் இன்முகம் நாடி) அல்லாஹ்வையே நோக்காகக் கொள்வதுடன், அவனின் கூலியையையும் நன்மையும் எதிர்பார்த்திருப்பான்.

ஓவ்வொரு செயற்பாடுகளிலும் தூய்மையான எண்ணத்தைப் பிரதிபளிப்பது அவசியமாகும். குடும்பத்திற்கு செலவு செய்யும்போது இவ்வெண்ணத்தைக் கொள்வது அவற்றில் ஒன்றாகும்.

التصنيفات

செலவளித்தல்