இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்…

இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக)

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والنسائي وابن ماجه وأحمد]

الشرح

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள். 'ரப்பிஃபிர்லீ, என்பது : அடியான் தனது இரட்சகனிடம் தனது பாவத்தை அழித்து விடுமாறும் குறைகளை மன்னித்து விடுமாறும் இறைஞ்சுவதைக் குறிக்கும்.

فوائد الحديث

இந்த துஆவை பர்ழ் மற்றும் நபிலான தொழுகையில் இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.

'ரப்பிஃபிர்லீ, என்ற வார்த்தை இரு தடவைகள் கூறுவது முஸ்தஹப்பாகும். அதனை ஓரு தடவை மாத்திரம் கூறுவது கட்டாயமாகும்.

التصنيفات

தொழும் முறை