(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று…

(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். பாதையில் உள்ள ஒரு நீர் நிலைக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது சிலர் அஸ்ர் தொழுகைக்காக அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக வுழு செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் தெளிவாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அவர்களுடன் சில ஸஹாபாக்களும் இருந்தனர். செல்லும் வழியில் நீர் கிடைத்தது அதனால் சில ஸஹாபக்கள் -நபித்தோழர்கள்-அஸ்ர் தொழுவதற்காக வுழு செய்ய விரைந்தனர். அவசரமாக வுழு செய்ததால் அவர்களின் குதிகால் பகுதிகள் நீர்படாது காய்ந்து காணப்பட்டது தெளிவாக புலப்பட்டது. அவ்வேளை நபியவர்கள் : வுழுவின் போது பாதத்தின் பிற்பகுதியை ஒழுங்காக கழுவாது அலட்சியமாய் இருப்போருக்கு நரகில் வேதனையும் நாசமும் உண்டாகட்டும் எனக் குறிப்பிட்டு விட்டு, வுழுவை பரிபூரணமாக செய்யுமாறு கட்டளைப் பிரப்பித்தார்கள்.

فوائد الحديث

வுழுவின் போது இரு கால்களையும் கழுவுவது வாஜிபாகும். (கட்டாயமாகும்.)காரணம் மஸ்ஹ் -ஈரக்கைய்யால் தடவுவது -செய்வது அனுமதிக்கப்பட்டிருந்தால் குதிகால் பகுதியை கழுதாதவரை நரகத்தைக்கொண்டு கண்டித்திருக்க மாட்டார்கள்

கழுவ வேண்டிய உறுப்புகளை முழுமையாக கழுவுவது கட்டாயக் கடமையுமாகும். கட்டாயம் கழுவ வேண்டிய உறுப்புக்களில் சிறிய பகுதியையேனும் வேண்டுமென்றோ அல்லது அலட்சியமாகவோ கழுவாது விட்டு விட்டால் அவரின் தொழுகை செல்லுபடியாகாது.

இந்த ஹதீஸ், அறிவு இல்லாதவர்களுக்குக் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

ஒரு மார்க்க அறிஞர் (ஆலிம்), ஒருவர் கடமையான மற்றும் சுன்னத்தான வணக்கங்களை கைவிடுவதை கண்டால், அவர் அவரை தகுந்த முறையில் திருத்த வேண்டும்.

முஹம்மத் இஸ்ஹாக் அத்திஹ்லவி (ரஹ்) அறிஞர்; வுழு செய்வதில் இஸ்பாஃ அதாவது பரிபூரணமாகச் செய்தல் என்பது மூன்று வகைகளாகும் எனக் குறிப்பிடுகிறார். முதலாது: பர்ழ்; இதன் கருத்து வுழுவின் உறுப்புக்களை முழுமையாக ஒரு தடவை கழுவுதல். இரண்டாவது : ஸுன்னத் : இதன் கருத்து : ஒவ்வொரு உறுப்பையும் மூன்று தடவைகள் கழுவுதல் மூன்றாவது: முஸ்தஹப் ;(விரும்பத்தக்கது) அதாவது ஒவ்வொரு உறுப்பையும் கட்டாயம்; கழுவ வேண்டிய எல்லையைத் தாண்டி மூன்று முறை கழுவுவதாகும்

التصنيفات

வுழூ செய்யும் முறை