'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'

'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் நீரைப் பற்றியும், அவற்றில் பிராணிகளும், மிருகங்களும் நீர் அருந்திவிட்டுச் செல்வது பற்றியும் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், பின்வருமாறு கூறினார்கள் : 'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد]

الشرح

விலங்குகளும், மிருகங்களும் அருந்திவிட்டுச் செல்லும் நீரின் சுத்தநிலை பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், 'அதன் கொள்ளளவு, இரு பீப்பாய்கள், அதாவது, 210 லீட்டர்கள் அளவு இருந்தால், அது அதிகமான நீராகும். அது அசுத்தமாகமாட்டாது. ஏதாவது ஒரு அசுத்ததைக் கொண்டு, அதனுடைய நிறம் அல்லது வாடை அல்லது சுவை ஆகிய தன்மைகள் மாற்றமடைந்தாலே தவிர.

فوائد الحديث

பொதுவாக நீர், அதன் தன்மைகளான நிறம், சுவை மற்றும் வாடை ஆகியவற்றில் ஒன்று, ஒரு அசுத்தத்தின் மூலம் மாற்றமடைவது கொண்டு அசுத்தமாகிவிடும். இந்த ஹதீஸ் பெரும்பான்மை நிலையின் அடிப்படையில் கூறப்பட்டதே அன்றி, அளவீட்டை வரையறுக்கும் விதத்தில் கூறப்படவில்லை.

அசுத்தமான ஒன்று நீரை மாற்றிவிட்டால், அந்த நீர் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் அது பொதுவாகவே அசுத்தமடைந்துவிடும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

التصنيفات

நீரின் சட்டங்கள்