ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்)…

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும்

உக்பா பின் ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்த போது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்ததை; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்''.

[சரியானது] [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி உரையாற்றும்போது வுழுவின் இரண்டு மிகப்பெறும் சிறப்புகளை குறிப்பிட்டார்கள்: முதலாவதாக: நபிகளார் காட்டித்தந்த முறையில் யார் முறையாக, முழுமையாக, நிறைவாக, மற்றும் சரியான முறையில் ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய அளவு தண்ணீ எடுத்து வுழூச் செய்து, பின்னர், أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்,) என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படும். அவர் எந்த வழியாக வேண்டுமானாலும் நுழையலாம். இரண்டாவது: யார் மேற்கூறப்பட்ட முறையில் பரிபூரணமாக வுழுவைச் செய்துவிட்டு, பின்னர் இரண்டு ரக்அத்களைத் இஹ்லாஸுடன் -மனத் தூய்மைப் பேணி உள்ளமும் உடலின் அனைத்து உறுப்புகளும் அல்லாஹ்வுக்கு முற்றும் முழுவதுமாக பணிந்த நிலையில் தொழுதால், அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்.

فوائد الحديث

சிறிய செயல்களுக்குக் கூட பெரிய கூலிகளை வழங்குவது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளும் கருணையுமாகும்.

முறையாகவும் முழுமையாகவும் வுழுச்; செய்து, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவது நபிவழியாகும். இது மகத்தான கூலியை பெற்றுத்தரும்.

முழுமையாக வுழுச்; செய்து, அதன் பிறகு இந்த திக்ரைச் கூறுவது சொர்க்கத்தில் நுழைவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

கடமையான குளிக்கும் ஒருவர், குளித்த பிறகு இந்த திக்ரைச் கூறுவது (முஸ்தஹப்பான) விரும்பத்தக்க விடயமாகும்.

கற்றல், அறிவைப் பரப்புதல் போன்ற நல்ல செயல்களிலும், வாழ்க்கை தொடர்பான விஷயங் களிலும் ஒருவருக்கொருவர் உதவுவதில் நபித் தோழர்கள் கொண்டிருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றமை.

வுழுச் செய்வது உடலைச் சுத்தப்படுத்தி அதன் அசுத்தங்களை நீக்குவது போல, வுழுச் செய்த பிறகு இந்த திக்ரை ஓதுவது உள்ளத்தை சுத்தப்படுத்தி, இணைவைப்பிலிருந்து அதனை பாதுகாகிறது.

التصنيفات

வுழூவின் சுன்னாக்களும் ஒழுங்குகளும்