ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்

ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.

[சரியானது] [இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது]

الشرح

இங்கு நபியவர்கள் தனது மகள் பாத்திமா மற்றும் அலீ பின் அபீ தாலிப் அவர்களது பிள்ளைகளாகிய ஹஸன், ஹுஸைன் ஆகிய இரு பேரப்பிள்ளைகளும், வாலிபர்களாக மரணித்து அல்லாஹ்வின் கிருபையினால் சுவனம் நுழைந்த அனைவருக்கும், அல்லது நபிமார்களையும் நேர்வழி நடந்த கலீபாக்களையும் தவிர்ந்து அனைத்து சுவனபதி வாலிபர்களுக்கும் தலைவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கின்றார்கள்.

فوائد الحديث

இங்கு ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது சிறப்பு தெளிவாகத் தெரிகின்றது.

இந்த ஹதீஸின் அர்த்தம் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: அந்த காலத்து வாலிபர்களில் யாரெல்லாம் சுவனவாதிகளோ அவர்களுக்கு இவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். அல்லது நபிமார்கள், குலபாக்கள் போன்று பொதுவாக சிறப்பிக்கப்பட்டுள்ளோர் அல்லாமல் ஏனையோரை விட இவர்கள் சிறந்தவர்கள். அல்லது சுயகௌரவம், வள்ளல் தன்மை, வீரம் போன்ற வாலிபப் பண்புகளை கொண்டவர்களுக்கு இவர்கள் தலைவர்களாக இருக்கலாம். இங்கு வாலிப வயது நாடப்படவில்லை. ஏனெனில் ஹசன் ஹுசைன் ஆகிய இருவருமே வயதான பின்னரே மரணித்தனர்.

التصنيفات

நபியின் குடும்பத்தினரின் சிறப்பு