யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள்…

யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்

உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் வுழூச் செய்வதை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள் என்றார்கள்'' என ஹும்ரான் (ரஹ்) கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்களுடைய பரிபூரண வுழூ முறையை இந்நபிமொழி பொதிந்துள்ளது. உஸ்மான் (ரலி) அவர்கள் தனது அழகான போதித்தல் முறைமையால் நபி (ஸல்) அவர்களின் வுழூ முறையை மக்கள் மனதில் பதியும் விதத்தில் செயல்முறையில் கற்பித்தார்கள். தண்ணீர் பாத்திரமொன்றை வரவழைத்து, நீர் மாசடையாமல் இருப்பதற்காக அதனுள் கையை முக்கிக் கழுவாமல் சுத்தமாகவும் வரை முதலில் வெளியில் ஊற்றிக் கழுவினார்கள், பின்னர் வலது கையை வலது கையைப் பாத்திரத்தினுள் நுழைத்து, நீரெடுத்து, வாய் கொப்பளித்து, மூக்கினுள் நீர் செலுத்தி சிந்திவிட்டார்கள். பின் மூன்று தடவை முகம் கழுவி, பின் முழங்கை வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின் முழுத் தலையையும் ஒரு தடவை நீரினால் தடவி விட்டு, இரு கால்களையும் கணுக்கால் உட்பட மூன்று தடவை கழுவினார்கள். இந்த பரிபூரணமான செயன்முறை வுழூவை நிறைவு செய்த பின் இது போன்றுதான் நபியவர்கள் வுழூச் செய்வதைத் தான் கண்டதாகக் கூறினார்கள். மேலும் இது போன்று வுழூச் செய்து உள்ளச்சத்துடன் இரண்டு ரக்அத் தொழுதவருக்கு பரிபூரணமான இந்த வுழூவின் காரணமாகவும், இந்தத் தொழுகையின் காரணமாகவும் அவரின் முன்சென்ற பாவங்களை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் அவருக்குக் கூலி வழங்குவதாகக் கூறினார்கள்.

فوائد الحديث

உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்பும், அறிவு, நபியின் ஸுன்னாவைப் பரப்புவதில் அவர்களுடைய ஆர்வம் பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது.

செயன்முறைக் கற்பித்தல் மனதில் பதியவும், விரைவாக விளங்கவும் மிக உகந்ததாகும்.

தூங்கி எழுந்திருக்காவிட்டாலும் பாத்திரத்தினுள் கையை விட முன் கழுவிக் கொள்வது ஸுன்னாவாகும், தூங்கி எழுந்தால் அது கடமையாகும்.

அல்லாஹ்வுக்காக ஒரு வணக்கத்தை செய்வதுடன் அதனை மக்களுக்குப் போதிப்பதையும் கருத்தில் கொள்வதால் அவருடைய உளத்தூய்மையில் குறைவு ஏற்பட மாட்டாது.

மாணவர்களுக்கு மிக விரைவில் விளங்கி, மனதில் பதிவதற்கான மிக நெருக்கமான வழிமுறையைக் கற்பித்தலின் போது தெரிவு செய்வது ஆசிரியருக்கு அவசியமாகும்.

ஒரு வணக்கத்தில் நுழைபவர் உலக விடயங்களுடன் தொடர்பான ஊசலாட்டங்களைத் தடுப்பதும், அதற்காக முயற்சிப்பதும் அவசியமாகும், ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையிலிருக்கும் போதுதான் அவனுக்கு மிக விருப்பமான விடயங்கள் நினைவுக்கு வருகின்றன.

வுழூவின் போதும் அதன் உறுப்புக்களைக் கழுவும் போதும் வலதை முற்படுத்துவது ஸுன்னத்தாகும்.

வாய் கொப்பளித்தல், மூக்கினுள் நீர் செலுத்துதல், சிந்தி விடுதல் ஆகியவற்றில் மேற்கண்ட ஒழுங்கு முறையைப் பேண வேண்டும்.

முகத்தை மூன்று முறை கழுவ வேண்டும்.

தலை முழுதையும் ஒரு தடவையே நீரினால் தடவ வேண்டும்.

கணுக்கால் உட்பட இரு கால்களையும் மூன்று தடவை கழுவ வேண்டும்.

மேற்கண்ட அனைத்தையும் ஒழுங்கு முறைப்படி செய்ய வேண்டும், ஏனெனில் அல்லாஹ் கழுவக்கூடிய உறுப்புக்களைத் தொடர்ச்சியாகக் கூறும் போது இடையில் தலையை நீரினால் தடவும்படி ஏவியிருப்பது ஒழுங்கு முறை கடமை என்பதையே உணர்த்துகின்றது.

இதுதான் நபி (ஸல்) அவர்களின் முழுமையான வுழூ முறையாகும்.

வுழூச் செய்த பின் அதன் காணிக்கை இரு ரக்அத்கள் தொழ வேண்டும்.

தொழுகை முழுமையடைந்து பரிபூரணமாவதற்கு வேண்டிய காரணம் அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளம் ஆஜராகுவதாகும். இதன் மூலம் உள்ளச்சத்தை ஆர்வமூட்டல், உலக விடயங்களில் மூழ்கிய நிலையில் தொழும் தொழுகை ஏற்கப்பட மாட்டாது என்ற எச்சரிக்கை போன்ற படிப்பினைகளைப் பெறலாம். தொழுகையில் இருக்கும் போது உலக சிந்தனைகள் தோன்றி, உடனே அதனைத் தடுத்தால் அவருக்கும் கூலி கிடைக்க வாய்ப்புள்ளது.

முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.

இங்கு வாக்களிக்கப்பட்டுள்ள நன்மையை அடைய இரண்டு விடயங்களும் முறையே நடைபெற வேண்டும். அவை மேற்கூறப்பட்ட விதத்தில் வுழூச் செய்தல், அதற்குப் பின் மேற்கூறப்பட்ட விதத்தில் இரு ரக்அத்கள் தொழுதல்.

வுழூ மற்றும் உள்ளச்சத்துடன் தொழும் இரு ரக்அத்களின் கூலி முன்சென்ற (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதாகும்.

التصنيفات

வுழூ செய்யும் முறை, வுழூ செய்யும் முறை