இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள்…

இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் :"இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம் : அல்லாஹ்வை விசுவாசித்து, அவனது வாக்குறுதியை உண்மைப்படுத்தி, நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதி இன்றி அவனுக்காக ரமழானில் நோன்பு நோற்றவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

فوائد الحديث

ரமழானின் சிறப்பும், அதற்குரிய உயர்ந்த இடமும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நோன்பிற்குரிய மாதமாகும், அதில் நோன்பு நோற்றவரின் (சிறு)பாவங்கள், தவறுகள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன.

ரமழான் மாதம் எனக் கூறாமல் ரமழான் என மாத்திரமும் இம்மாதத்திற்குப் பிரயோகிக்கலாம்.

التصنيفات

நோன்பின் சிறப்பு