إعدادات العرض
நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள்…
நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்
இப்னு அஸ்ஹரின் அடிமையான அபூ உபைத் கூறுகறார் : நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Português Kurdî සිංහල Kiswahili Tiếng Việt অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Македонски ไทย Українська తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری Türkçe አማርኛ Malagasy پښتو ភាសាខ្មែរ Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு மற்றும்; ஹஜ்ஜுப் பொருநாள் தினங்களில் நோன்பு நோற்பதை தடைசெய்தார்கள். (அதாவது நபி (ஸல்) அவர்கள், ஷவ்வால் மாதத்தின் 1 ஆம் நாள் மற்றும் துல்-ஹிஜ்ஜா மாதத்தின் 10 ஆம் நாள் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்.) ரமழான் நோன்பு முடிவடையும் நாள் ஈதுல் பித்ர் ஆகும். பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணும் நாள் ஈத்-அல்ஹா ஆகும்.فوائد الحديث
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் தஷ்ரீகுடைய மூன்று தினங்களில் (அதாவது தஷ்ரிகுடைய நாட்களில்) நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. தஷ்ரீக் நாட்கள் (அய்யாமுத்தஷ்ரீக்) என்பது ஈத் அழ்;ஹாவுக்குப் பிறகு வரும் மூன்று நாட்களான (துல்-ஹிஜ்ஜாவின் 11, 12, 13) ஆகிய நாட்களைக் குறிக்கும். இந்த நாட்களில் நோன்பு நோற்பதும் தடைசெய்யப் பட்டுள்ளது. இருப்பினும், குர்பானி கொடுக்க முடியாத யாத்திரிகர்களுக்கு -ஹாஜிகளுக்கு- மட்டும் இந்த நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படுகிறது
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இரண்டு பெருநாள் தினம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்;: இந்த இரண்டு நாட்களிலும் நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் விவரித்திருப்பது முக்கிய ஒரு அம்சமாகும்;. அதாவது ஈதுல் பித்ர் என்பது ரமழான் நோன்பை முடித்து ரமழான் மாதத்தின் முடிவைக் குறிப்பதாகும். ஹஜ்ஜுப் பெருநாள் என்பது குர்பான்; கொடுப்பவர்கள்; தங்கள் குர்பானின் இறைச்சியை உண்பதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்வது இதன் நோக்கமாக உள்ளது.
இமாம் தனது பிரசங்கத்தில் சூழ்நிலைகள் மற்றும் பருவகாலத்தை கருத்திற்கொண்டு அதற்குப் பொருத்தமான சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் வழங்குதல் வேண்டும். அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமுமாகும். அதாவது (பெருநாள் அல்லது பிற சிறப்பு சந்தர்ப்பம்) கருத்தில் கொண்டு மக்களுக்குத் தேவையான விஷயங்களை விளக்குவது சிறந்தது.
பலியிடப்பட்ட விலங்கின் இறைச்சியை உண்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
التصنيفات
நோன்பாளிக்குத் தடைசெய்யப்பட்டவைகள்