உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்

உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

யாராவது ஜும்ஆத் தொழுகைக்காக வர நாடினால், கடமையான குளிப்பைப் போல குளித்துக்கொள்வது அவருக்கு ஸுன்னாவாகும் என்பதை நபியவர்கள் இங்கு உறுதிப் படுத்துகின்றார்கள்

فوائد الحديث

ஜும்ஆக் குளிப்பை வலியுறுத்தல். அது ஜும்ஆத் தினத்தில் ஒரு முஃமின் செய்யவேண்டிய ஒரு ஸுன்னா என்றும், தொழுகைக்காக வெளிக்கிளம்ப சற்றுமுன்னர் குளிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தல்.

சுத்தம் மற்றும் நறுமணத்தைப் பேணுவது ஒரு முஸ்லிமின் ஒழுக்கப்பண்பாடுகளில் உள்ளதாகும். மக்களை சந்தித்து, அவர்களுடன் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அதிலும் குறிப்பாக, ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகைகளின் போது இது மேலும் வலியுறுத்தப்படும்.

இந்த ஹதீஸில் ஏவப்படுபவர்கள் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றுவது கடமையானவர்களே! ஏனெனில், அவர்கள் தான் ஜும்ஆவுக்காக வருகை தருபவர்கள்.

ஜும்ஆவுக்காக வருபவர் சுத்தமாக இருப்பது விரும்பத்தக்கது. எனவே, உடம்பில் உள்ள துர்வாடைகள் நீங்குமளவு குளித்து, நறுமணம் பூசிக்கொள்வார். அவர் வுழு மாத்திரம் செய்தாலும் நிறைவேறும்.

التصنيفات

குளிப்பு, ஜும்ஆ தொழுகை