إعدادات العرض
யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை:…
யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை: أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ، அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக் என்ற துஆவை (பொருள் ';,அர்ஷின் இரட்சகனான மகத்தான அல்லாஹ்விடம் உம்மை குணமாக்கும்படி நான் வேண்டுகிறேன்') என்று கூறினால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை நிச்சயமாக குணமாக்குவான்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை: أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ، அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக் என்ற துஆவை (பொருள் ';,அர்ஷின் இரட்சகனான மகத்தான அல்லாஹ்விடம் உம்மை குணமாக்கும்படி நான் வேண்டுகிறேன்') என்று கூறினால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை நிச்சயமாக குணமாக்குவான்'.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी සිංහල Hausa Kurdî Português Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy Українська ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு முஸ்லிம் மரணத்தருவாயை அடையாத சக முஸ்லிமை நோய்விசாரிக்கச் சென்று அவருக்கு 'அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக்' (மகத்தான அர்ஷின் இறைவனான அல்லாஹ்விடம் உன்னை குணப்படுத்துமாறு வேண்டுகிறேன்) என்று ஏழு முறை துஆ செய்தால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை குணமாக்குவான். இங்கு 'அல்லாஹ் மகத்தானவன்' என்பது அவனது ذات் (மெய்நிலை), குணங்கள், செயல்கள் அனைத்திலும் மகத்துவம் உடையவன் என்பதைக் குறிக்கிறது.فوائد الحديث
இந்த துஆவை ஏழு தடவைகள் ஓதி நோயாளிக்காக் பிரார்த்திப்பது விரும்பத்தக்கது.
யார் இந்த துஆவை உண்மையான நம்பிக்கையுடனும் உளத்தூய்மையுடனும் ஓதுகிறாரோ, அல்லாஹ்வின் உதவியினால் குணமடைதல் நிச்சயம் நிகழும்.
இந்த துஆவை மௌனமாகவோ, வெளிப்படையாகவோ கூற முடியும் இரண்டும் அனுமதிக்கப்பட்டவையே, ஆனால் நோயாளி கேட்கும் வகையில் கூறுவது சிறந்தது. ஏனெனில் அது அவருக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும்.
التصنيفات
மார்க்கரீதியான மந்திரித்தல்