மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது,…

மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், ஜாஹிலிய்யாக் கால பண்புகளாகவும், நிராகரிப்பாளர்களின் செயற்களாகவும் உள்ள, மக்களிடம் காணப்படும் இரு பண்புகளைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவ்விரண்டுமாவன: முதலாவது, மக்களது வம்சத்தில் குறைகூறி, அவற்றைக் தரம்குறைத்துப் பேசி, அவர்களைத் தாழ்த்திப் பெருமையடித்தல். இரண்டாவது, சோதனைகளின் போது, இறைவிதியில் வெறுப்பைக் காட்டும் விதமாக சப்தத்தை உயர்த்துதல், அல்லது பொறுமையிழப்பின் உச்சகட்டமாக, சட்டைகளைக் கிழித்துக்கொள்ளல்.

فوائد الحديث

பணிவாக இருக்கவும், மக்களிடம் பெருமையடிக்காமல் இருக்கவும் ஆர்வமூட்டல்.

சோதனைகளின் போது ஆத்திரமடையாமல், பொறுமையாக இருப்பது கட்டாயமாகும்.

இவை சிறிய இறைநிராகரிப்பில் உள்ளவையாகும். (இவ்வாறான) இறைநிராகரிப்பின் ஏதாவது ஒரு கிளை யாரிடம் உள்ளதோ, அவரிடம் பெரிய நிராகரிப்பு ஏற்படும் வரை, அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுமளவு நிராகரிப்பாளராக மாறிவிடமாட்டார்.

வம்சங்களில் குறைகூறுதல் போன்ற, முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் எல்லா அம்சங்களையும் இஸ்லாம் தடுத்துள்ளது.

التصنيفات

நிராகரிப்பு