நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில் அல்குர்ஆன் இறக்ககப்பட்டது. அவர்கள் மக்காவில் பதின்மூன்று வருடங்கள் தங்கினார்கள். பின்னர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல அல்லாஹ்வின் உத்தரவு கிடைக்க மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கே பத்து வருடங்கள் வாழ்ந்து பின்னர் அங்கேயே மரணித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வஹி இறக்கப்பட்டு அவர் நபியாக அனுப்பப் படுகையில் அவர்களின் வயது நாற்பதாகும். வஹி இறங்கியதன் பின்பு பதின்மூன்று வருடங்கள் மக்காவில் தங்கினார்கள். பின்பு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு உத்தரவு கிடைக்க அங்கே சென்று பத்து வருடங்கள் வாழ்ந்தார்கள். பின்பு அவர்கள் தமது அறுபத்து மூன்றாம்(63) வயதில் மரணமானார்கள்.

فوائد الحديث

நபி ஸல்லல்லாஹு அலை அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஸஹாபாக்களின் கரிசணையும் ஈடுபாடும்.

التصنيفات

நம் தூதர் முஹம்மத் (ஸல்), நபியவர்களின் வாழ்க்கை வரலாறு