நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகம் மிஸ்வாக் செய்பவர்களாகவும் அதனை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். பல்துலக்குவது –மிஸ்வாக் செய்வது- சில வேளைகளில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும் அவற்றில் : இரவில் தூங்கி எழும்பினால் பல்துலக்குவது. அந்த நேரத்தில் நபியவர்கள் அராக் குச்சியால் -மிஸ்வாக்- பல்லை துலக்கி சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.

فوائد الحديث

இரவில் தூங்கி எழும்பிய பின் மிஸ்வாக்- பல்துலக்குவது மார்க்கரீதீயாக வலியுறுத்தப்பட்ட விடயமாகும். காரணம் தூக்கம் வாயின் வாடையை மாற்றுகிறது. மிஸ்வாக் பற்களைச் சுத்தம் செய்ய பயன்படும் ஒரு சாதனமாகும். (நபியவர்கள் பற்தூரிகையாக அராக் மரத்தின் குச்சியைப் பயன்படுத்தினார்கள்).

மேலே குறிப்பிட்ட கருத்தின் பின்னணியில் வாய் துர்நாற்றம் ஏற்படும் போதெல்லாம் பல் துலக்குவது மார்க்கரீதியாக வலியுறுத்தப்பட்டிருத்தல்.

பொதுவாக சுத்தமாக இருப்பது மார்க்கத்தில் வலியுறத்தப்பட்ட ஒரு விடயமாகும். இது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையாகவும் உயர் ஒழுக்கப்பண்புகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

முழுமையாக பல்துலக்குவது என்பது பற்கள், ஈறுகள், நாக்கு போன்றவற்றை குறிக்கும்

ஸிவாக் என்பது அராக் அல்லது வேறு மரங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு குச்சி. இது பற்கள் மற்றும் வாயை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும், இதனால் வாய் நறுமணம் பெறுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கிவிடுகிறது.

التصنيفات

இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள், சுத்தம் செய்வதில் நபியவர்களின் வழிகாட்டல்