உணவு தயாராக இருக்கும் போதும் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழுவது கூடாது.

உணவு தயாராக இருக்கும் போதும் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழுவது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தொழுகையின் போது அடியாரின் உள்ளம் இறைவன் முன்னிலையில் ஆஜராகுவதை அவன் விரும்புதாக இந்நபிமொழி உறுதிப்படுத்துகின்றது. அமைதி, உள்ளச்சத்தை இல்லாமல் செய்யும் வெளிப் பராக்குகளைத் துண்டிப்பதன் மூலம் மாத்திரமே இது சாத்தியப்படும். இதனால் உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவதை அல்லாஹ் தடுத்துள்ளான், அதேபோன்று சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழுவதனால் அதிலேயே கவனம் சிதறுவதனால் அதனையும் தடுத்துள்ளான்.

فوائد الحديث

மேற்கூறப்பட்ட நபிமொழிக்கமைய தொழுகை முடிவு நேரம் நெருங்காமலிருக்கும் வரை சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழுவது வெறுக்கத்தக்கதாகும். அதே நிலையில் தொழுதால் அத்தொழுகை குறைபாட்டுடன் செல்லுபடியாகும். அதனை மீட்டத் தேவையில்லை. சிறுநீர் மற்றும் மலத்தை அடக்காத நிலையில் தொழுகையை ஆரம்பித்து, பின்னர் அந்நிலை ஏற்பட்டால் தொழுகையைப் பூரணப்படுத்துவதில் தடங்கள் ஏதும் ஏற்படாதிருக்கும் வரை அத்தொழுகை செல்லுபடியாகும். அது வெறுக்கப்பட்டதுமல்ல.

தொழுகையில் உள்ளச்சம், இரைஞ்சுதல் அவசியமாகும்.

தொழுகையின் கவனத்தை சிதறடிக்கும் அனைத்தையும் அப்புறப்படுத்துவது அவசியமாகும்.

மலசலம் கழிப்பதற்காக தொழுகை நேரங்களை வழமையாக்கிக் கொள்ளாமலிருக்கும் நிபந்தனையுடன் அதற்கான தேவை ஜும்ஆ மற்றும் கூட்டுத் தொழுகையை விடுவதற்குரிய சலுகையாக இருக்கின்றது.

التصنيفات

தொழுவோர் விடும் தவறுகளட, தொழுவோர் விடும் தவறுகளட