'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு அக்குள்களின் வெண்மை தெரியும்…

'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு தனது இரு கைககளுக்கிடையியில் இடைவெளி விடுவார்கள்'

அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னு புஹைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு அக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு தனது இரு கைககளுக்கிடையியில் இடைவெளி விடுவார்கள்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது தனது இரு கைககளுக்கிடையில் இடைவெளிவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது அவரின் கைகளையும் இரு இரக்கை போன்று தனது அக்குளின் வெண்மையான தோல் தெரியுமளவிற்கு விலாப்புறத்திலிருந்து அகற்றி வைப்பார்கள். இது தனது இரு விலாப்பகுதியிலிருந்தும் கைகளை மிகவும் தூரமாக்கி வைத்திருந்ததை காட்டுகிறது.

فوائد الحديث

இரு விலாப்பகுதியை விட்டு மேல் கையை அகற்றி வைக்கும் முறையை ஸுஜூதில் கடைப்பிடிப்பது (முஸ்தஹப்பான) விரும்பத்தக்க விடயமாகும்.

ஸுஜூதின் போது கைகளை அகற்றி வைப்பதனால் பக்கத்தில் உள்ள மஃமூமுக்கு தொந்தரவு ஏற்படுமென்றிருந்தால் அவ்வாறு செய்வது கூடாது.

ஸுஜூதின் போது கைகளை அகற்றி வைப்பதில் பல நன்மைகளும் பல இரகசியங்களும் உண்டு. அவற்றுள் சில பின்வருமாறு : தொழுகையில் ஆர்வமும் உட்சாகமும் ஏற்படுதல். அதாவது ஸுஜுதானது அதற்குரிய அனைத்து உறுப்புகளினாலும் செய்யப்படும்போது அதன் ஒவ்வொரு உறுப்புகளும் வணக்கத்தின் அதன் பங்கை பெற்றுக்கொண்டுவிட்டது என்பதாகும்.

التصنيفات

தொழுகையில் நபியவர்களின் வழிகாட்டல்