எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில…

எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர். அவர்களுக்குப் பின்னர் சில வழித்தோன்றல்கள் வருவர். செய்யாதவற்றைக் கூறுவார்கள். ஏவப்படாதவற்றைக் செய்வார்கள். யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், தனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அச்சமுதாயத்தில் அவருக்கென்று, தூய்மையானவர்களும், உதவியாளர்களும், உளத்தூய்மையுடன் போராடுபவர்களும் இருப்பார்கள் என்றும், அந்த நபிக்குப் பின்னர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்குத் தகுதியானவர்களாகவும், நபியுடைய வழிமுறையை எடுத்து நடந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள் என்றும், பின்பு அந்த நன்மக்களுக்குப் பின்னர் வரும் சிலர் எந்த நலவுமற்றவர்களாக இருப்பதோடு, அவர்கள் செய்யாததைக் கூறிக்கொண்டும், ஏவப்படாததைச் செய்துகொண்டும் இருப்பார்கள் என்றும் கூறிவிட்டு, யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.

فوائد الحديث

தமது சொற்களிலும், செயற்களிலும் மார்க்கத்தோடு முரண்படுபவர்களுக்கெதிராக போரிட வலியுறுத்தல்.

உள்ளம் ஒரு பாவத்தை வெறுக்காமல் இருப்பது, ஈமான் பலவீனமாக உள்ளது, அல்லது ஈமானே இல்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.

நபிமார்களுக்கு இலகுபடுத்திக்கொடுக்கும் விதமாக, அவர்களுக்குப் பின்னர் அவர்களது தூதைச் சுமந்து செல்லும் சிலரை ஏற்படுத்தியுள்ளமை.

யார் வெற்றிபெற விரும்புகின்றாரோ, அவர் நபிமார்களின் வழிமுறையைப் பின்பற்றட்டும். ஏனெனில், அவர்களது வழி தவிர்ந்த அனைத்து வழிகளும் அழிவும், வழிகேடும் தான்.

நபியவர்களது, மற்றும் நபித்தோழர்களது காலத்தை விட்டும் தூரமாகிக்கொண்டு செல்லும் போதெல்லாம், மக்கள் ஸுன்னாக்களை விட்டுவிட்டு, மனோஇச்சைகளைப் பின்பற்றி, நூதனங்களை உருவாக்கி விடுவர்.

ஜிஹாத் எனும் போராட்டத்தின் படிமுறைகளைத் தெளிவுபடுத்துதல். தடுத்து நிறுத்தும் சக்தியுடைய, பொறுப்புதாரிகள், ஆட்சியார்கள், தலைவர்கள் போன்றோர் கையால் தடுப்பதும், அடுத்த கட்டமாக, பேச்சின் ஊடாக, சத்தியத்தைத் தெளிவுபடுத்தி அதன்பால் அழைப்பது, அடுத்த கட்டமாக, உள்ளத்தின் மூலம், பாவத்தைப் பொருந்திக் கொள்ளாமலோ, நேசிக்காமலோ வெறுப்பது.

நன்மையை ஏவுவதும், பாவத்தைத் தடுப்பதும் கட்டாயமாகும்.

التصنيفات

நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும், போரின் பிரிவுகள்