إعدادات العرض
ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில்…
ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ""ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी සිංහල ئۇيغۇرچە Hausa Português Kurdî Kiswahili Tiếng Việt অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული ಕನ್ನಡ Moore Svenska Македонски ไทย Українська తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy پښتو ភាសាខ្មែរ Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
பேணுதல் என்ற அடிப்படையில் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோன்பு நோற்பதைத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். காரணம் ரமழான் நோன்பின் பிறைபார்ப்பதுடன் தொடர் பட்டுள்ளது. இதில் வருத்திக்கொள்ளவோ கஷ்டப் படுத்திக் கொள்ளவோ தேவையில்லை. இருப்பினும், யாராவது ஒருவர், ஒரு நாள் நோன்பு நோற்று மற்றொரு நாள் நோன்பு நோற்காமல் இருப்பது அல்லது திங்கள் அல்லது வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது போன்ற வழமையைக் கொண்டிருந்தால், வழக்கமான நாள் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தால், அவர் அந்த நாளில் நோன்பு நோற்கலாம். ஏனெனில் இது ரமழானை வரவேற்பதாக அமையாது. இதேபோல், தவறவிட்ட (கழா நோன்பு மற்றும் நேர்ச்சை நோன்புகள் போன்ற கட்டாய நோன்புகளையும் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோற்கலாம்.فوائد الحديث
எந்த ஒரு வணக்க வழிபாடுககளையும் வருத்திக் கொண்டு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இபாதத்துக்களை – வணக்கங்களை- அது மார்க்க ஒழுங்கில் செய்யப்படவேண்டிய முறையில் கூட்டல் குறைத்தலின்றி அவற்றின் ஒழுங்குகளைப் பேணிச் செய்தல் கடமையாகும்.
இந்த ஹதீஸின் படி குறிப்பிட்ட காலம், நேரம் வரும் வரையில் வணக்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என்பதில் ஒரு நோக்கம் அல்லது ஒரு நுட்பம் அடங்கியுள்ளது- அல்லாஹ் மிகவும் அறிந்தவன்- வணக்க வழிபாடுகளில் உபரியான வணக்கத்திலிருந்து கட்டாயமான வணக்கத்தை வேறுபடுத்தி காட்டுவது அவற்றில் ஒன்றாகும். அத்துடன் ரமழானுக்கு உட்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தயாராக வேண்டும் என்ற நோக்கமும் இதில் உள்ளது. மேலும் ரமழான் மாதம் என்பது நோன்பு வணக்கத்திற்கு மாத்திரம் உரித்தான ஒரு பிரதான மாதமாக இருப்பதும் இதன் நோக்காக இருக்க முடியும்.
