'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். …

'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்வை, உங்களுக்குக் கடமையாக இருக்கும்

வாஇழ் அல் ஹழ்ரமீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ஸலமா இப்னு யஸீத் அல் ஜுஃபீ அவர்கள் நபியவர்களிடம், 'அல்லாஹ்வுடைய நபியே! எமக்குப் பொறுப்பாக வரும் தலைவர்கள், அவர்களது உரிமைகளைக் கேட்டு எடுத்துக்கொண்டு, எமது உரிமைகளைத் தராமல் இருந்தால், என்ன செய்யுமாறு ஏவுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். நபியவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கேட்டும் நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர் மீண்டும் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை கேட்டபோது, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அவரைப் பிடித்து இழுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். 'நீங்கள் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளவை, அவர்களுக்குக் கடமையாக இருக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்வை, உங்களுக்குக் கடமையாக இருக்கும்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

மக்களிடம் தமக்குள்ள உரிமைகளாகிய, செவிசாய்த்தல், வழிப்படல் போன்றவற்றை கேட்டுப் பெற்றுக் கொண்டுவிட்டு அவர்கள் மீதுள்ள கடமைகளாகிய, நீதமாக நடத்தல், போர்ச்செல்வங்களைக் கொடுத்தல், அநியாயத்தைத் தடுத்தல், சமத்துவம் பேணல் போன்றவற்றைக் கொடுக்காமல் இருக்கும் ஆட்சியாளர்கள் விடயத்தில் என்ன செய்வது? என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. நபியவர்கள் இந்தக் கேள்விகளை வெறுத்தது போன்று, பொருட்படுத்தாது இருந்துவிட்டார்கள். ஆனாலும், கேள்விகேட்டவர், இரண்டு மூன்று தடவைகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உடனே, அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள், அவரை மௌனிக்கச் செய்வதற்காக இழுத்து எடுத்தார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : அவர்களது வார்த்தைகளுக்கு செவிசாயுங்கள்! அவர்களது கட்டளைக்கு அடிபணியுங்கள். அவர்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டு, சுமத்தப்பட்டுள்ள நீதம், பிரஜைகளின் உரிமைகளைக் கொடுத்தல் போன்றவை அவர்களது கடமைகளாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள, கட்டுப்படல், கடமைகளை நிறைவேற்றல், சோதனைகளில் பொறுமையாக இருத்தல் போன்றவை உங்கள் மீது கடமையானவையாகும்.

فوائد الحديث

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தக்கூடிய அனைத்திலும், எல்லா நிலைகளிலும், ஆட்சியாளர்களுக்கு செவிசாய்த்துக் கட்டுப்படுமாறு இங்கு ஏவப்பட்டுள்ளது. அவர்கள் மக்களின் உரிமைகளை வழங்காவிட்டாலும் சரியே!

ஆட்சியாளர்கள் தமது கடமைகளில் பராமுகமாக இருப்பதென்பது, பதிலாக, மக்கள் தமது கடமைகளில் பராமுகமாக இருப்பதை நியாயப்படுத்தமாட்டாது. ஒவ்வொருவரும் அவர்களது செயற்கள் பற்றியே விசாரிக்கப்படுபவார்கள். தமது பொடுபோக்கிற்காகவே குற்றம் பிடிக்கப்படுவார்கள்.

இந்த மார்க்கம் 'பண்டமாற்று' முறையில் செயற்படக்கூடியது அல்ல. மாறாக, ஒரு தரப்பு தமது கடமைகளில் பொடுபோக்கு செய்தாலும், மறுதரப்பு தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும். இந்த ஹதீஸும் அதையே உணர்த்துகின்றது.

التصنيفات

தலைவருக்கு பிரஜைகள் ஆற்றவேண்டிய கடமைகள்