யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம்…

யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம் சுவனத்தில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வான்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம் சுவனத்தில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

வணக்கத்திற்காக வேண்டியோ, கல்விக்காகவோ, வேறு எந்த நல்ல நோக்கங்களுக்காக வேண்டியோ, காலை, மாலை என எந்த நேரத்திலாவது யாராவது பள்ளிவாசலுக்குச் சென்றால், அவ்வாறு காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம், சுவனத்தில் அவருக்கு அல்லாஹ் ஒரு விருந்தையும், அதற்குரிய ஓர் இடத்தையும் ஏற்பாடு செய்வான் என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.

فوائد الحديث

பள்ளிவாசலுக்குச் செல்வதன் சிறப்பு, அங்கு ஜமாஅத் தொழகையைப் பேணி நிறைவேற்ற ஆர்வமூட்டல். பள்ளிவாசலுக்கு வருபவர்களுக்காக அல்லாஹ் ஏற்பாடு செய்துவைத்துள்ள, நன்மைகள், சிறப்புக்கள், நற்கூலிகள், விருந்துகள் என எத்துணை அம்சங்கள் பள்ளிவாசலுக்கு வராதவர்களுக்குத் தப்பிச் செல்கின்றன.

மனிதர்களே தமது வீடுகளுக்கு வருபவர்களை கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு உணவுகளை வழங்கும்போது, அல்லாஹ் தனது படைப்புக்களை விட எவ்வளவு சங்கையானவன்! எனவே தான், தன்னுடைய வீட்டை நாடி வருபவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தி, அவர்களுக்கு மகத்தான, பாரிய விருந்துகளை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான்.

பள்ளிவாசலுக்குச் செல்வதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைதல். ஏனெனில், அவர் காலையிலும், மாலையிலும் போகும் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப, அவருக்கு விருந்தகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

التصنيفات

கூட்டுத் தொழுகையின் சிறப்பும் சட்டங்களும்