'என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை…

'என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தில் வரும் தீய எண்ணங்களுக்கு, அவர் அவற்றைச் செயல்படுத்தும் வரை அல்லது அவற்றை வெளிப்படுத்தும் வரை –(அது குறித்து பேசும் வரை) குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள். ஏனென்றால் சிரமத்தை நீக்குதல் அடிப்படையில் அத்தகைய எண்ணங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சமூகத்தாரின் மனங்களிலும் இதயங்களிலும் தோன்றி மறையும் எண்ணங்களுக்கு அவை மனதில் நிலையாக குடிகொண்டாலே தவிர குற்றம் பிடிக்கப்பட மாட்டாது . ஆணவம், கர்வம், நயவஞ்சகத்தனம் போன்ற கெட்ட எண்ணங்கள் எவனுடைய உள்ளத்தில் நிலைகொண்டு, உள்ளம் அவற்றால் திருப்தி காணும் அளவிற்கு அவற்றுக்கு இடமளிக்கிறானோ, அல்லது தன் உறுப்புகளினால் அவற்றைச் செய்கிறானோ அல்லது தன் நாவால் அவற்றை வெளிப்படுத்துகிறானோ அவன் குற்றம் பிடிக்கப்படுவான் என்கிறது இந்த ஹதீஸ்.

فوائد الحديث

இதயத்தில் எழும் நிலையற்ற சிந்தனைகளையும் எண்ணங்களையும்; அல்லாஹ் மன்னித்துவிட்டான். ஏனெனில் அவை ஒரு மனிதனின் உள்ளத்தில் வந்து எண்ண ஓட்டமாக அவை கடந்து செல்கின்றன.

ஒருவரின் மனதில் விவாகரத்து பற்றிய எண்ணம் வந்து, அவர் அது குறித்து பேசவோ அல்லது எழுதவோ இல்லை என்றால், அது விவாவகரத்தகாக கருதப்படமாட்டாது.

இதயத்தில் தோன்றும் எண்ணங்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவை இதயத்தில் பதிந்து, அதன்படி செயல்படாத வரை அல்லது தனது நாவால் அவற்றைப் பேசும் வரை ஒருவர் குற்றமாக பிடிக்கப்படமாட்டார்.

இதயத்தில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களுக்கு முந்தைய சமூத்தாருக்கு மாற்றாமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அவர்களின் உம்மத்தினர் குற்றம் பிடிக்கபட மாட்டார்கள் என்ற தனித்துவமானது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகளின் உம்மத்தின் உயர் நிலையை பிரதிபலிக்கிறது.

التصنيفات

விவாகரத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்