''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும்…

''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

யார் வுழுவின் ஸுன்னத்துக்களையும் அதன் ஒழுங்குகளையும் பேணி வுழூ செய்கிறாரோ அது அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுவதுடன், அவரின் பாவங்கள் அவரின் கை மற்றும் கால் நகங்களின் கீழாலும் வெளியேறிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

வுழூவின் ஒழுங்குகள், அதன் ஸுன்னாக்களை கற்பதில் கரிசனை காட்டுவதுடன், அதன்படி செயல்படுவதை ஊக்குவித்தல்.

வுழுவின் சிறப்பும் அது சிறிய பாவங்களுக்கான பரிகாரமாக அமைந்துள்ளமையும், பெரும் பாவங்களைப் பொருத்தவரை தவ்பா செய்வது அவசியமாகும்.

பாவங்கள் வெளியேறுவதற்கான நிபந்தனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியது போன்று வுழூவை எவ்வித குறைகளுமின்றி முழுமையாக செய்வதாகும்.

இந்த ஹதீஸில் பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்பது பெரும்பாவங்களிலிருந்து விலகி தவ்பா செய்தல் என்ற வரையரைக்குட்பட்ட ஒரு விடயமாகும். இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் ''உங்களுக்கு தடுக்கப் பட்டவைகளில் பெரும்பாவங்களை விட்டும் நீங்கள் விலகிக் கொண்டால் உங்களை விட்டும் உங்கள் (சிறு) பாவங்களை நாம் அழித்திடுவோம்''. (நிஸா : 31).

التصنيفات

வுழூவின் சிறப்பு