'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பறவைளில் கூரிய கால்…

'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பறவைளில் கூரிய கால் நகங்களைக் கொண்டு வேட்டையாடி உண்ணும் அனைத்து பறவைகளையும் நபி (ஸல்) அவர்கள் (சாப்பிடத்) தடை செய்தார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தொட்டும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பறவைளில் கூரிய கால் நகங்களைக் கொண்டு வேட்டையாடி உண்ணும் அனைத்து பறவைகளையும் நபி (ஸல்) அவர்கள் (சாப்பிடத்) தடை செய்தார்கள்.

[صحيح] [رواه مسلم]

الشرح

நபி (ஸல்) அவர்கள் கூர்மையான பற்களைக் கொண்ட வேட்டையாடும் விலங்குகளையும், கால்களில் கூரிய நகங்களைக் கொண்ட தாக்கி வேட்டையாடும் பறவைகளையும் சாப்பிடுவதைத் தடை செய்தார்கள்.

فوائد الحديث

உணவு மற்றும் பானங்கள் அனைத்திலும் தூய்மையானவற்றை மாத்திரம் உட்கொள்வதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகின்றமை.

உணவுகள் பற்றிய அடிப்படை விதி என்னவென்றால், (ஹராம்) தடைசெய்யப்பட்டவை என நிரூபிக்கப்பட்டவை தவிர, அனைத்தும் (ஹலால்)அனுமதிக்கப்பட்டவையாகும்

التصنيفات

அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும்