நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை…

நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்

கைஸ் இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي والنسائي]

الشرح

நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் வந்தார்கள், அப்போது நபியவர்கள் நீர் மற்றும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக உபயோப் படுத்தும் நறுமணம் நிறைந்த இலந்தை மரத்தின் இலையைக் கொண்டு குளித்துவருமாறு பணித்தார்கள்.

فوائد الحديث

ஒரு காபிர் இஸ்லாத்தில் நுழையும் போது குளித்தல் மார்க்கத்தில் உள்ளதாகும்.

உடல் மற்றும் ஆன்மாவிற்கான இஸ்லாத்தின் கரிசனையானது அதன் மேன்மையை எடுத்தியம்புகிறது.

சுத்தமான நீரில் சுத்தமான பொருட்கள் கலப்பது அதன் இயல்பான சுத்தத்தில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடமாட்டாது.

வாசணை நிறைந்த ஸித்ர் மர இலையின் இடத்தில் தற்போது நறுமண சோப்புகளை அது போன்றவைகளை யன்படுத்திட முடியும்.

التصنيفات

குளிப்புக் கடமையாகும் காரியங்கள்