நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன்

நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன்

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன் : லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகியனவே அவை. ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். அத்துடன் முஅத்தின் அதான் கூறி பஜ்ரும் உதயமாகிவிட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் என ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் ஒரு அறிவிப்பில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுகையின் பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] [இதன் எல்லா அறிவிப்புக்களும் புஹாரீ,முஸ்லிம் ஆகியோர் அறிவித்தவைகளாகும்]

الشرح

ராதிபான ஸுன்னத் தொழுகைள் என்றழைக்கப்படும் -பர்ழான தொழுகைகளுக்கு முன் அல்லது பின் தொழப்படும் தொழுகை- பத்து ரக்அத்துக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நினைவில் வைத்துக்கொண்டதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தெளிவுபடுத்துகிறாரகள். அவைகள் பின்வருமாறு: லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மஃரிபுக்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், ஸுப்ஹுத்தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், ஆக இவைகள்; பத்து ரக்அத்துக்களாகும். ஜும்ஆத் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள்.

فوائد الحديث

மேற்படி ராதிபான ஸுன்னத்துக்களை பேணித் தொழுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கு ஷரீஆவில் அனுமதியுள்ளது, என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

التصنيفات

உபரித் தொழுகை, தொழுகையில் நபியவர்களின் வழிகாட்டல், திருமணம் குடும்ப வாழ்வு என்பவற்றில் நபியவர்களின் வழிகாட்டல்