(தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை…

(தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமுக்கும் முன் முந்தி செல்பவருக்கு கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்கிறார்கள். அவ்வாறு நடந்து கொள்பவரின் தலை கழுதையின் தலையாக அல்லது அவரின் வடிவத்தை கழுதையின் வடிவமாக அல்லாஹ் மாற்றிடுவான் என்பதே அந்த கடுமையான எச்சரிகை.

فوائد الحديث

இமாமைப் பின்பற்றி தொழும் மஃமுமிற்கு நான்கு நிலைகள் உண்டு : அவற்றில் மூன்று தடுக்கப்பட்டவைகளாகவும் ஒன்று அனுமதிக்கப்பட்டதுமாகும். இமாமை முந்திச்செல்லுதல், இமாமுடன் ஒன்றாகச்செல்லுதல், தாமதமாகச் செல்லுதல் போன்றன தடுக்கப்பட்டவைகளாகும். இமாமைத் தொடரந்து அவரைப்பின்பற்றிச் செல்வது மாத்திரம் அனுமதிக்கப்பட்ட நிலையாகும்.

தொழுகையில் இமாமைப் பின்துயர்ந்து செல்வது வாஜிபாகும்-கட்டாயமாகும்.

இமாமுக்கும் முன் தலையை உயர்துபவரின் தோற்றம் மாற்றப்படுவது பற்றி எச்சரிக்கை நிகழ முடியுமான விடயமாகும் அதுவே உருமாற்றமாகும்.

التصنيفات

இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள்