அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின்…

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன். முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

தொழுகையில் இறுதி தஷஹ்ஹுத் ஒதியதன் பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் நான்கு விடயங்களிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக்கூடியவராக இருந்தார்கள். எனவே நாமும் அவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடி பிராத்திக்க வேண்டும் என்றும் எமக்கு கட்டளையிடுகிறார்கள். முதலாவது: கப்ரின் வேதனை இரண்டாவது: மறுமை நாளின் நரக வேதனை. மூன்றாவது: உலக வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை : அதாவது உலக வாழ்வின் சோதனை என்பது உலகில் தடைசெய்யப்பட்ட ஆசைகள் மற்றும் வீணான சந்தேகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். மரணத்தின் சோதனை மரணத் தருவாயில் இஸ்லாத்ததை விட்டு விலகிச் செல்லுதல் அல்லது ஸுன்னாவிலிருந்து தடம்புரலுதல் அல்லது கப்ரில் நிகழும் இருமலக்குகளின் விசாரணை குறித்த சோதனை போன்றவற்றைக் இது குறிக்கும். நான்காவது : மறுமை நெருங்குகையில் இறுதிக் காலத்தில் வெளிப்படும் தஜ்ஜாலின் சோதனை : இவனால் அடியார்கள் அதிகம் சோதனைக்குள்ளாவார்கள். அந்நேரத்தில் அவனின் சோதனையும் வழிகெடுப்பும் மிகவும் உச்ச நிலையில் இருப்பதாலே இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

فوائد الحديث

இங்கு குறிப்பிடப்பட்ட பாதுகாப்புத் தேடும் பிரார்த்தனையானது பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இம்மை மறுமையின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலும் இது கருத்துச் செரிவுமிக்கதாகவும் காணப்படுகிறது.

மண்ணறை வேதனை உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.

சோதனைகளின் அபாயமும், இதிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடி பிரார்த்திப்பதன் முக்கயத்துவமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளமை.

தஜ்ஜாலின் வருகை உறுதிப்படுத்தப் பட்டிருப்பதுடன் அவனின் மிகப்பெரும் சோதனையும் குறிப்பிடப்பட்டிருத்தல்.

இறுதி தஷஹ்ஹூதின் பின் இந்த துஆவை ஓதுவது முஸ்தஹப்பாகும்.

நல்ல காரியங்களின் பின் இந்த துஆவை ஓதுவது (முஸ்தஹப்பாகும்-) வரவேற்கத்தக்கதாகும்.

التصنيفات

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்