'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று…

'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகி றார்கள் : 'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்).

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஜும்ஆவிற்கு சமூகமளித்தவர் அவசியம் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கொன்றை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது கதீப் அவர்கள் உரையாற்றுகையில் அவரின் போதனைகளை, அறிவுறைகளை சிந்தித்துணர்வதற்காக காது தாழ்த்தி மௌனமாக கேட்பது அவ்வொழுங்குகளின் முக்கியமான ஒன்றாகும். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கையில் பிறரைப் பார்த்து 'செவிமடுப்பீராக' 'மௌனமாக இருப்பீராக' என ஆகக் குறைந்தளவிலான வார்த்தைகளினால் பேசினாலும் அவர் ஜும்ஆவின் சிறப்பை இழந்துவிட்டவராவார் என விபரித்துள்ளார்கள்.

فوائد الحديث

ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில்; பேசுவது தடுக்கப்பட்டதாகும்- ஹராமாகும்.அது தீமையைத் தடுத்தல், ஸலாத்திற்கு பதிலுரைத்தல், தும்மியவருக்குப் பதில் கூறல், போன்ற எந்த வகையான பேச்சாக இருந்தாலும் சரியே.

ஜும்ஆ உரையின் போது இமாமுடன் ஒருவர் பேசுதல், அல்லது இமாம் ஒருவருடன் பேசுவது போன்றவை இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகிறது.

இரண்டு உரைகளுக்கும் மத்தியில் தேவையின் போது பேசுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

இமாம் உரைநிகழ்த்திக்கொண்டிருக்கையில் நபியவர்களின் பெயர்கூறினால் இரகசியமாக அவர்களின்; மீது ஸலாத்தும் ஸலாமும் கூறுவீராக. அதே போன்று இமாம் பிரார்த்தனை செய்தால் அந்த துஆவிற்கு இரகசியமாக ஆமீன் கூறுவீராக.

التصنيفات

ஜும்ஆ தொழுகை