ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது

ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது.

[صحيح] [رواه البخاري]

الشرح

யாராவது அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து, அதன் மூலம் அவரது பாதங்களில் புழுதி படிந்தால் அவரை நரகம் தீண்டாது என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார் என்ற நற்செய்தி இங்கு உள்ளது.

புழுதி உடல் முழுவதுமே படும் ஒன்றாக இருந்தும் இரு பாதங்களும் கூறப்படக் காரணம், பெரும்பாலான போராளிகள் அக்காலத்தில் நடந்து யுத்தம் செய்பவர்களாக இருந்தமையே! பாதங்கள் எப்படியுமே புழுதி படுபவையே.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: பாதத்தில் புழுதிபடுவதே நரகம் நுழையத் தடையாக இருக்கின்றதென்றால், தன்னால் இயன்ற முயற்சிகளையும் செலவழித்து யுத்தத்திற்குச் செல்பவரின் நிலை எவ்வாறிருக்கும்.

التصنيفات

போரின் சிறப்பு