“நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர்…

“நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களது மனைவியர் இஃதிகாப் இருந்தார்கள்”

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியான உம்முல் முஃமினீன்; ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களது மனைவியர் இஃதிகாப் இருந்தார்கள்”.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

இறை நம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். நபியவர்கள்; இறக்கும் வரை இதனை தொடர்ந்தும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, அவரது மனைவியர்களும் இஃதிகாஃபை கடைப்பிடித்து வந்தனர்.

فوائد الحديث

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருப்பது இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரித்த ஒரு விடயமாகும். ஃபித்னாக்களிலிருந்து பாதுகாப்பு இருக்கும் நிலையில் இந்த இபாதத்தை பெண்களும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாபை கடைப்பிடித்து வந்திருப்பதால் ரமழானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னாவாகும்.

இஃதிகாஃப் மாற்றப்படாத தொடரான ஒரு சுன்னாவாகும். இதற்குச் சான்றாக, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மனைவியர்களின் இஃதிகாஃப் உள்ளது.

التصنيفات

பள்ளியில் தரித்தல் இஃதிகாப்