வலீ (பொறுப்புதாரி) இல்லாமல் திருமணம் இல்லை.

வலீ (பொறுப்புதாரி) இல்லாமல் திருமணம் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "வலீ (பொறுப்புதாரி) இல்லாமல் திருமணம் இல்லை".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை தாரமீ பதிவு செய்துள்ளார்]

الشرح

திருமண ஒப்பந்தத்தில் வலீ அவசியம் என்பதையும், அது செல்லுபடியாக வலீ இருப்பது நிபந்தனையாகும், திருமண ஒப்பந்தத்தை மணமகள் தரப்பில் பொறுப்பேற்கும் வலீயின்றி அது செல்லுபடியாகாது என்பதையும் இந்நபிமொழி அறிவிக்கின்றது. புத்தி சுயாதீனமுள்ள, பருவமடைந்த, ஆணாகவும், திருமண நலன்கள் பற்றிய அறிவுள்ளவராகவும் வலீ இருப்பதுடன், மணமகளுடைய அதே மார்க்கத்தைப் பின்பற்றுவராகவும் அவர் இருப்பது இப்பொறுப்பிற்குரிய நிபந்தனைகளாகும். இந்தப் பண்புகளை அவர் கொண்டிருக்காவிட்டால் வலீயாக இருக்கத் தகுதியற்றவராவார். அவ்வாறு யாரும் மனமகளுக்குக் கிடைக்காவிட்டால் முஸ்லிம் ஆட்சியதிகாரி திருமணத்தைப் பொறுப்பேற்று நடத்தி வைக்க வேண்டும்.

فوائد الحديث

வலீ ஒருவர் இருப்பது திருமணம் செல்லுபடியாவதற்கான நிபந்தனையாகும்.

வலீ என்பவர் மணமகளுக்கு மிக நெருங்கிய உறவுக்கார ஆணாகும், அவ்வாறு ஒருவர் இருக்கும் பட்சத்தில் தூரத்து உறவுக்காரர் ஒருவர் பொறுப்பு நிற்க முடியாது.

வலீ இல்லாவிடில் திருமணம் செல்லுபடியற்றதாகி, சட்டவிரோதமானதாக மாறிவிடும். நீதிபதியிடம் சென்று, அல்லது சட்டபூர்வமான விவாகரத்தின் மூலம் அத்திருமணத்தை ரத்துச் செய்வது அவசியமாகும்.

ஒரு பெண்ணிற்கு அவளது உறவினர்களிலோ, எஜமானர்களிலோ வலீ ஒருவர் இல்லாவிட்டால் முஸ்லிம் ஆட்சியாளர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் அவளுக்கு வலீயாக நின்று திருமணத்தைப் பொறுப்பேற்று நடத்தி வைப்பார். ஏனெனில் வலீ இல்லாதோருக்கு ஆட்சியாளர்தான் வலீயாக இருக்க வேண்டும்.

குறித்த வலீ பொறுப்புணர்வுள்ளவராக இருத்தல் அவசியமாகும். அவர் பொறுப்புணர்வுள்ளவராக இருக்காத வரை பெண்ணிற்கு நலவுகள் கிடைக்க வாய்ப்பில்லை.

التصنيفات

திருமணம்