“போதையூட்டக்கூடியவை அனைத்தும் மதூபானமாகும். மேலும் பேதையூட்டக்கூடியவை அனைத்தும் ஹராமாகும். இந்த உலகத்தில்…

“போதையூட்டக்கூடியவை அனைத்தும் மதூபானமாகும். மேலும் பேதையூட்டக்கூடியவை அனைத்தும் ஹராமாகும். இந்த உலகத்தில் மதூபானம் அருந்தி தௌபா செய்யாது அதில் திலைத்து இருந்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமைiயில் மதூபானம் அருந்த மாட்டார்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “போதையூட்டக்கூடியவை அனைத்தும் மதூபானமாகும். மேலும் பேதையூட்டக்கூடியவை அனைத்தும் ஹராமாகும். இந்த உலகத்தில் மதூபானம் அருந்தி தௌபா செய்யாது அதில் திலைத்து இருந்த நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமைiயில் மதூபானம் அருந்த மாட்டார்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தும் போதையூட்டும் மதுபானம் ஆகும். அது பருகுதுதல் அல்லது சாப்பிடுதல் அல்லது உரிஞ்சுதல் அல்லது வேறு ஏதாவது வழிமுறைகளில் காணப்பட்டாலும் சரியே. மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தையும் அது சிறிய அளவில் பெரிய அளவில் இருந்தாலும் அல்லாஹ் அதனை ஹராமாக்கி தடைசெய்துள்ளான். மேற்குறிப்பிடப்பட்ட போதைப்பொருட்களின் வகைகளில் ஒன்றை ஒருவர் தொடராக குடித்து, தௌபா –பாவமன்னிப்புக்- கேட்காது மரணித்து விட்டால், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு உட்படுவார். அவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனை சுவர்க்கத்து மதுவை அருந்துவதற்கான பாக்கியத்தை இழப்பதாகும்.

فوائد الحديث

மது தடை செய்யப்படுவதற்கான காரணம் போதையாகும். ஆகவே போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.

பெரும் பாதிப்பும் ஆரோக்கிய கேடும் மதுபானத்தில் காணப்படுவதால் அல்லாஹ் மதுவை தடைசெய்துள்ளான்.

சுவர்க்கத்தில் மதுஅருந்துவது, பேரின்பத்தின் பரிபூரண நிலையாகும்.

உலகத்தில் யார் மது அருந்துவதை தவிர்ந்து கொள்ளவில்லையோ, அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் மது அருந்துவதை விட்டும் தடுத்து விடுவான். இது செயலுக்கேற்ற கூலியாகும்.

மரணத்திற்கு முன் பாவங்களுக்கு தௌபா செய்ய விரைந்திட வேண்டும் என வலியுறுத்தியிருத்தல்.

التصنيفات

தடைசெய்யப்பட்ட குடிபானங்கள்