' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு…

' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

வருடத்தில் ஏனைய நாட்களை விடவும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் மிகவும் சிறப்புக்குரியது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஸஹாபாக்களிடம் அமல்களில் ஜிஹாதே மிகவும் சிறப்புக்குரிய அமல் -செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டதினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த பத்து நாட்கள் அல்லாது வேறு நாட்களில் ஜிஹாத் செய்வது சிறப்புக்குரியதா அல்லது இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது சிறப்புக்குரியதா என வினவினார்கள்.அதற்கு நபியவர்கள்: இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது ஜிஹாதை விடவும் மிகவும் சிறப்புக்குரியது என பதிலளித்தார்கள். ஆனால் ஒரு மனிதரைத் தவிர, அவர் தனது உயிரையும் உடமைகளையும அல்லாஹ்வின் பாதையில் பணயமாக வைத்து போராளியாக வெளிக்கிளம்பிச் சென்று, தனது செல்வத்தையும், உயிரையையும் இழக்கிறார் என்றால் அந்த மனிதரைத் தவிர என்றும் கூறினார்கள். இந்த சிறப்பான நாட்களில் சிறப்புற்று விளங்கும் அமல்களில் இதுதான் மேலானது.

فوائد الحديث

துல்ஹிஜ்ஜா பத்து நாட்களின் சிறப்பு குறிப்பிடபப்பட்டுள்ளமை, ஆகவே ஒரு முஸ்லிம் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்வதுடன் வணக்கவழிபாடுளில் அதிகம் ஈடுபடுவதுடன் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்தல் அல்குர்ஆன் ஓதுதல், தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் போன்றவற்றை கூறுதல், தொழுதல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல் போன்ற அனைத்துவகையான நற்காரியங்களிலிலும் ஈடுபடுதல் வேண்டும்.

التصنيفات

துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்கள், போரின் சிறப்பு